நீலகிரி மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகை ரசிக்க உதவும், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலைக்கு ரயில் சேவை, மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மலைகளின் ராணி (Queen of the Mountains)
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள உதகமண்டலம் எனப்படும் ஊட்டி, தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் முதன்மையானது. மலைகளின் ராணி என வருணிக்கப்படும் இந்த ஊட்டியின் காணக்கிடைக்காத இயற்கை எழிலை ரசித்தபடி பயணிப்பதற்காகவே மலை ரயில் சேரவை இயக்கப்படுகிறது.
நூற்றாண்டு பழமை (Century old)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மலை ரயில் சேவை தற்போது வரை இயங்கி வருகிறது.
குவியும் சுற்றுலாப் பயணிகள் (Accumulating tourists)
நீராவி இன்ஜினால் இயக்கப்படும் இம்மலை ரயிலில் பயணம் செய்வது அதிக சுகமானது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை மலை முகடுகளிடையே பல்சக்கரங்களில் இயக்கப்படும் இந்த மலை ரயில் பல்வேறு குகைகளைத்தாண்டி செல்வதால் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது.
இதில் பயணம் செய்வதற்கு தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட உள்நாடுகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 2005 ஆம் ஆண்டு இந்த மலை ரயிலுக்கு யுனெஸ்கோ சார்பில் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது.
கொரோனாவால் நிறுத்தம் (Stop by Corona)
இருப்பினும் இந்த மலை ரயில் சேவை, தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.
தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதால், ஊட்டி மலை ரயில் சேவை வரும் (செப்டம்பர்) 6 ஆம் தேதி (நாளை மறுநாள்) முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முன்பதிவு அவசியம் (Booking is required)
ரயில்வேயின் இந்த அறிவிப்பு சுற்றுலாப்பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
ரூ.1800 ரூபாய்க்கு விற்பனையாகும் வேப்பங்குச்சி- அமெரிக்காவில் நடக்குது இந்தக் கொடுமை!