வளர்த்த கிடா மார்பில் முட்டும் என்பார்கள். இதற்கு உதாரணமாக தெலங்கானாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இம்மாநிலத்தில் நடைபெற்ற சேவல் சண்டையின்போது, வளர்த்த சேவலே, உரிமையாளரின் உயருக்கு எமனாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள லோத்தன்னுார் கிராமத்தில், 16 பேர் அடங்கிய குழுவினர், சேவல் சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
தப்பிச் செல்ல முயன்ற சேவல் (Rooster trying to escape)
இதில் பங்கேற்ற சேவல் ஒன்றின் காலில், கூர்மையான கத்திகள் கட்டப்பட்டிருந்தன. போட்டியின்போது, அந்த சேவல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றது.
அதை, உரிமையாளர் பிடிக்க முயற்சி மேற்கொண்டார்.
உயிரைப் பறித்தக் கத்தி (Life-threatening knife)
அப்போது எதிர்பாராதவிதமாக, சேவல் தன் கால்களால், அவரை தாக்கியது. இதன் காரணமாக காலில் கட்டப்பட்டிருந்த கத்தி, அவரின் இடுப்பை பதம் பார்த்தது. படுகாயமடைந்த அவர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பலியான உரிமையாளர் (The victim is the owner)
எனினும், அதிக ரத்தம் வெளியேறியதால், சேவல் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த நபர்தான், அந்த சேவல் சண்டையை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் என்பது அனைவரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியது.
சட்டவிரோதமாக இந்த போட்டியை ஏற்பாடு செய்த மீதமுள்ள, 15 பேரை தேடும் பணிகளில், போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் படிக்க....
மானியத்தில் கிணறு ரெடி- மின்சாரம் எப்போ கிடைக்கும்?