பெங்களூருவில் கடும் மழை காரணமாக வெள்ளநீர் தேங்கியுள்ளதால் விமான பயணிகள் டிராக்டர் மூலம் அழைத்து வரப்படும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இடைவிடாது கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு கடும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பெங்களூரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ரூ.225 கோடி
கனமழை காரணமாக பெங்களூரு நகரம் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்களுக்கு பெயர்போன பெங்களூருவில் மழை மற்றும் வெள்ளத்தால் அங்குள்ள ஐடி நிறுவனங்களுக்கு ரூ.225 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் - டிராக்டர்
பெங்களூரு விமான நிலையத்திற்கு சொகுசாக விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் நகரத்துக்குள் கார்ப்பரேஷன் டிராக்டர் மூலம் அழைத்து வரப்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதேபோல், பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய Work from Home அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் பல்வேறு பகுதிகளில் நீண்டநேர மின் வெட்டு போன்ற பிரச்சினைகள் இருப்பதால் வீட்டில் இருந்தும் வேலை செய்ய முடிவதில்லை. இதுபோன்ற சூழலில் அலுவலகத்துக்கு எப்படி சென்று வருவது? இதற்காகவே ட்ராக்டர்களை வாடகைக்கு எடுத்து அதில் ஏறி ஆஃபீஸ் சென்று வருகின்றனர் ஐடி ஊழியர்கள். பல நிறுவனங்களின் CEO, CFO போன்ற சீனியர் அதிகாரிகள் கூட ட்ராக்டர்களில் போகிறார்கள்.
இந்நிலையில், பெங்களூருவில் ஐடி ஊழியர்கள் ட்ராக்டரில் அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர். சாதாரண ஊழியர்கள் மட்டுமல்லாமல் ஐடி நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள், நிர்வாகிகள் கூட ட்ராக்டரில்தான் ஆஃபீஸுக்கு போகின்றார்களாம்.
மேலும் படிக்க...