சிறுக சிறுக சேமிப்பது எதிர்கால வாழ்க்கையை சிரமமின்றி எதிர்கொள்ள வழிவகுக்கும். அதற்கு அன்றாட சேமிப்புத் திட்டங்கள் அதிகளவில் கைகொடுக்கின்றன.அந்த வகையில், LICயின் Money back Plan நல்ல சாய்ஸ்.
இந்தத்திட்டத்தில் வெறும் 160 முதலீடு செய்தால் போதும். ரூ. 23 லட்சத்தை நமக்கு சொந்தமாக்கிக்கொள்ளலாம்.
மணி பேக் பிளான் (Money back Plan)
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற எல்ஐசி மணி பேக் பிளான் (Money Back Plan) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்தால், ஒவ்வொரு ஆண்டும் பணம் திரும்பக் கிடைக்கும். மேலும் மெச்சூரிட்டி முடிவில் நல்ல வருமானம் கிடைக்கும். இத்துடன் வரிச் சலுகைகளும் இருக்கின்றன.
சிறப்பு அம்சம் (Features)
இது ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டம். இதில் நல்ல வருமானமும், போனஸும் உறுதியாக கிடைக்கும். 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன. இந்த பாலிசிக்கு வரி விதிக்கப்படாது. வட்டி தொகை, பிரீமியத் தொகை, மெச்சூரிட்டி தொகை ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்படாது.
LIC Policy : வாழ்வை வளமாக்கும் எல்.ஐ.சி., பாலிசிகள்! 2021ல் தவறவிட வேண்டாம்!!
முதலீடு (Investment)
இந்த திட்டத்தில் 25 ஆண்டு பாலிசியில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். தினமும் 160 ரூபாய் சேமித்து முதலீடு செய்தால், 25 ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு 23 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதற்கு வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
போனஸ் (Bonus)
25 ஆண்டுகள் முதலீட்டில், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளின் இறுதியிலும் 15 முதல் 20 % பணம் உங்களிடம் திருப்பிக் கொடுக்கப்படும். எனினும், குறைந்தபட்சம் 10% பிரீமியம் டெபாசிட் செய்தபிறகே இவ்வகையில் பணம் திரும்பக் கிடைக்கும்.
மேலும் படிக்க...