நாம் இருக்கும் காலத்திற்கு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, வேலையை விட்டுவிட்டு ஓய்வு எடுக்கும் காலத்திற்காக நாம் ஒவ்வொருவரும் சேமிக்க வேண்டியது கட்டாயம்.
சொந்தக்காலில் நிற்பது (Standing on your own two feet)
இதனை அண்மைகாலக் கொரோனா நமக்கு நன்குப் புகட்டிச் சென்றிருக்கிறது என்றே சொல்லலாம். குறிப்பாக, ஓய்வு காலத்தில் மற்றவர்களை நம்பிக்கொண்டிருக்காமல், சொந்தக்காலில் நிற்பது என்பதுதான் நிம்மதியான ஓய்வுகாலமாக இருக்கும்.
தபால் அலுவலக சேமிப்பு (Post office savings)
இதில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கக்கூடிய சில அரசு திட்டங்கள் உள்ளன. அத்தகைய ஒரு திட்டம் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டத்தில் உள்ளது.
வங்கிகளை போன்று, மக்களுக்கு பயனுள்ள பலவகையான சேமிப்பு திட்டங்களை இந்திய தபால் துறை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (Post Office PPF Account) திட்டமாகும். இது உங்களுக்கான ஒரு சிறந்த முதலீடு திட்டமாக இருக்கும். அதன் சிறப்பம்சம் என்னவென்றால், சிறு பணத்தை முதலீடு செய்வதன் மூலம், நல்ல வருமானத்தைப் பெறலாம்.
இதற்கு வங்கிகளைப் போன்று, மக்களுக்கு பயனுள்ள பலவகையான சேமிப்பு திட்டங்களை இந்திய தபால் துறை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (Post Office PPF Account) திட்டமாகும்.
இதில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பது உறுதி.
வட்டி எவ்வளவு? (How much is the interest?)
பிபிஎஃப் திட்டத்தில் 7.10 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
இதற்காக, பிபிஎஃப் (Public Provident Fund) கணக்கை அருகில் உள்ள எந்த தபால் அலுவலகத்திற்கும் சென்று தொடங்கலாம். நாட்டில் உள்ள அனைத்து குடிமகனும் இந்தக் கணக்கைத் திறக்கலாம். தற்போது, இத்திட்டத்தில் 7.10 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள் (Highlights)
இது நல்ல வருமானத்தை பெற சிறந்த நீண்ட கால முதலீடாகும். இந்த திட்டத்தில் சேருவதன் மூலம் மூன்று இடங்களில் வரிச் சலுகைகள் கிடைக்கின்றன.
பங்களிப்பு, வட்டி வருமானம் (Interest Income) மற்றும் முதிர்வு தொகை ஆகிய மூன்றுக்கும் வரிவிலக்கு கிடைக்கும். இந்த பிபிஎஃப் கணக்கை திறக்க குறைந்தபட்சம் ரூ .500 மூலம் திறக்க முடியும். ஒவ்வொரு வருடமும் 500 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்சமாக இந்த கணக்கில் ஒவ்வொரு வருடமும் அதிகபட்சம் 1.5 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். இந்த திட்டம் 15 வருடங்களுக்கானது. முதிர்வு காலத்திற்கு முன்பு பணத்தை திரும்பப் பெற முடியாது. ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 5-5 ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டிக்க முடியும்.
கூட்டு வட்டி (compound interest)
தபால் அலுவலக பிபிஎஃப் (PPF) கணக்கு 15 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைகிறது. இந்தக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்குக் கூட்டு வட்டி கிடைக்கும். அதாவது, ஒரு வருடத்தில் ரூ .500 ஐ நீங்கள் டெபாசிட் செய்தால் அதற்கு வட்டி ரூ .30 கிடைக்கிறது என்றால், ஆண்டு முதல் 530 ரூபாய்க்கு வட்டி கிடைக்கும்.
எவ்வளவு லாபம்? (How much profit?)
இந்த திட்டத்தின் கீழ், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ .2 ஆயிரத்தை டெபாசிட் செய்தால், 15 ஆண்டுகளில் நீங்கள் சுமார் ரூ.3,36,000 டெபாசிட் செய்வீர்கள். இதற்கு வட்டி ரூ .2,71,135 கிடைக்கும். உங்களுக்கு மொத்தம் ரூ .6,31,135 கிடைக்கும்.
மாதம் ரூ. 10 ஆயிரம்
நீங்கள் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்றால், ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000 வைப்பு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த வைப்புத் தொகை ரூ .18,00,000 ஆக இருக்கும். இதில் ரூ .13,55,679 வட்டி பெறப்படும். அதாவது 15 வருடங்களுக்குப் பிறகு உங்கள் கணக்கில் ரூ. 31,55,679 கிடைக்கும்.
நீங்கள் பொதுவாகப் பார்த்தால், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெபாசிட் செய்யப்பட்ட பணத்தின் இரட்டிப்பு நன்மையைப் பெறுவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், இது முதலீட்டிற்கான ஒரு சிறந்த திட்டமாகும், இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க...
தடுப்பூசியை கலந்து போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!
தங்கத்தில் முதலீடு செய்ய சிறந்த வழி எதுவென அறிந்து கொள்ளுங்கள்!