Blogs

Friday, 22 April 2022 09:46 AM , by: R. Balakrishnan

Penalty for giving credit card without permission

கிரெடிட் கார்டுகளை வழங்கும் வங்கி உட்பட பல நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்தக் கட்டுப்பாடுகின் அடிப்படையில் தான் கிரெடிட் கார்டுககளை இனி விற்க முடியும். வாடிக்கையாளர்களின் அனுமதியை பெறாமல், புதிய கார்டுகளை வழங்குவதோ அல்லது ஏற்கனவே அவர்கள் வைத்திருக்கும் கார்டை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொள்வதோ கூடாது என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர் அனுமதி இன்றி அவ்வாறு செயல்பட்டால், பில் தொகையை போல இருமடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிரெடிட் கார்டு (Credit Card)

கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனங்கள் அல்லது மூன்றாம் தரப்பு முகவர்கள், வாடிக்கையாளர்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கும் போது, மிரட்டல் அல்லது துன்புறுத்தலில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழங்குதல் தொடர்பான ரிசர்வ் வங்கியின் முதன்மை வழிகாட்டுதல்களில், வாடிக்கையாளர்களால் கோரப்படாத நிலையில், புதிய கார்டுகள் வழங்குதல் அல்லது மேம்படுத்துதல் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் ஜூலை 1ம் தேதியிலிருந்து அமலாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இது போன்று கோரப்படாமல் கார்டு வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது நிலுவையை வசூலிப்பதற்காக மிரட்டப்பட்டிருந்தாலோ, கார்டில் யார் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோ அவர், ரிசர்வ் வங்கியின் குறைதீர்ப்பாளரை அணுகலாம்.

குறைதீர்ப்பாளர் திட்டத்தின் விதிகளின்படி, கோரப்படாத கார்டை பெற்றவருக்கு, கார்டு வழங்குபவர் செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகையைத் தீர்மானிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: தாமதப்படுத்தும் ரிசர்வ் வங்கி!

வாட்ஸ்அப்பில் இரயில் டிக்கெட் சேவை: அறிமுகமானது புதிய வசதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)