அனைவருக்கும் பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என அரசுக்கு பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் அனைத்து குடிமக்களும் பலன் பெறுவார்கள் என்பது தான் பொருளாதார ஆலோசனைக் குழுவின் கருத்தாக உள்ளது. சீனியர் சிட்டிசன்களுக்கு (Senior Citizens) கூடுதல் ஏற்பாடுகள் செய்யவும் பரிந்துரை செய்துள்ளது.
அனைவருக்குமான பென்சன் திட்டம்
இந்தியாவில் ஊழியர்களுக்கான பணி ஓய்வு வயது வரம்பை நீட்டிக்கும் படி மத்திய அரசுக்கான பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், அனைவருக்குமான பென்சன் திட்டம் (Universal Pension System) அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதன்படி, அனைவருக்கும் மாதம் குறைந்தபட்சமாக 2000 ரூபாயாவது பென்சன் தொகையாக வழங்க வேண்டும் என அரசுக்கு பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், நாட்டில் உள்ள சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் ஏற்பாடுகளையும், சேவைகளையும், சலுகைகளையும் வழங்க வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Good News: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் உத்தரவாத வருமானம்
சீனியர் சிட்டிசன்கள்
‘World Population Prospectus 2019’ அறிக்கையின்படி, 2050ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை 32 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்தியாவின் மக்கள் தொகையில் 19.5% பேர் சீனியர் சிட்டிசன்களாக இருப்பார்கள் என இந்த அறிக்கை கூறுகிறது.
2019ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை சுமார் 14 கோடியாக இருந்துள்ளது. அதாவது இந்திய மக்கள் தொகையில் 10% பேர் சீனியர் சிட்டிசன்களாக இருந்துள்ளனர்.