Blogs

Monday, 08 August 2022 03:26 PM , by: R. Balakrishnan

Pension scheme

ஒவ்வொரு நபரும் பணிக்காலத்தின் போது சம்பளம் மற்றும் இதர சலுகைகளை பெற முடியும். ஆனால், பணி ஓய்வுபெற்ற பின் அவர்களுக்கான வருமானமும், சலுகைகளும் குறைந்துவிடும். எனவே, பென்சன் உள்ளிட்ட ஓய்வுக்கால வருமானத்துக்கு இப்போதில் இருந்தே திட்டமிட வேண்டும்.

பென்சன் (Pension)

அமைப்புசாரா துறையை சேர்ந்த தொழிலாளர்கள் பென்சன் பெறுவதற்காக பிரதமர் ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா (Pradhan Mantri Shram Yogi Maan-dhan) திட்டத்தை மத்திய அரசு 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், கணவன் மனைவி இருவருமே 200 ரூபாய் முதலீட்டில் 72000 ரூபாய் பென்சன் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு மாதம் தோறும் 200 ரூபாய் மட்டும் முதலீடு செய்து வந்தால் போதும். இத்திட்டம் அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

18 முதல் 40 வயது வரையிலானவர்கள், மாதம் 15,000 ரூபாய் வரை வருமானம் பெறும் அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரதமர் ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம். பயனாளி 60 வயதை தொட்டபின் மாதம் 3000 ரூபாய் பென்சன் கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு 72000 ரூபாய் பென்சன் கிடைக்கும்.

பென்சன் பெறும் காலத்தில் பயனாளி இறந்துவிட்டால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு 50% பென்சன் தொகை குடும்ப பென்சனாக கிடைக்கும். இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் அருகில் உள்ள பொது சேவை மையத்துக்கு சென்று கணக்கை தொடங்கலாம்.

மேலும் படிக்க

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்டம்பர் முதல் புதிய பென்ஷன் திட்டம்!

PF தகவல்கள் திருட்டு: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)