தமிழகம் முழுவதும் காரீப், குறுவை, சொர்ணவாரி, கோடை பருவ சாகுபடி நடைபெற்று வருகிறது. வேளாண் பணி தடையின்றி தொடர வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இடுபொருள்களை வழங்கி வருகிறது.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் கோடை பருவ பயிர்கள் சாகுபடி நடைபெற்று வருகின்றன. கூட்டுப் பண்ணைய திட்டத்தின் மூலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடவுப் பணிகள் மற்றும் விதைப்பு பணிகள் சிறப்புற நடந்து வருகிறது. மேலும் இத்திட்டத்தின் மூலம் தற்போது ராபி, பிசானம் பருவ நெல், நிலக்கடலை, எள் போன்ற பயிர்கள் இயந்திரங்கள் மூலம் அறுவடைப் பணிகள் தொய்வின்றி நடைபெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்களில், குறுவை, சித்திரை பட்டத்துக்குத் தேவையான நெல், உளுந்து, எண்ணெய் வித்து விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வேளாண் இடுபொருள்கள், உரங்கள் என அனைத்தும் வாகனங்கள் மூலம் விவசாயிகளின் இருப்பிடங்களுக்கே சென்று நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் எய்சா் டிராக்டா்கள் மூலம் 90 நாள்களுக்கு வாடகையின்றி அனைத்து விதமான வேளாண் பணிகள் மேற்கொள்வதற்காக வேளாண்மைத் துறை அலுவலம் ஏற்பாடு செய்துள்ளது.
விவசாயிகள் இடுபொருள், சாகுபடி, இயந்திரங்கள் குறித்த கேள்விகள் இருந்தால் கீழ்காணும் எண்களில் தொடர்பு தெரிந்துகொள்ளலாம்.
வேளாண்மை உதவி இயக்குநர்கள்
பெரம்பலூர் - 94435 90920
ஆலத்தூர் - 97891 42145
வேப்பூர் - 88256 31615
வேப்பந்தட்டை - 80128 49600