Blogs

Saturday, 02 May 2020 06:10 PM , by: Anitha Jegadeesan

ஊரடங்கு உத்தரவு காரணமாக கால்நடை வளர்ப்பவர்கள், செல்ல பிராணி வளர்ப்பவர்கள் மருத்துவ உதவி, ஆலோசனை பெறுவதில் சிரமம் இருப்பதால் கால்நடை விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று, சிகிச்சை உட்பட தடுப்பூசிகள் அளித்து வருகிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.

கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், மருந்தகங்களுக்கு செல்வதிலும் சிரமம் இருப்பதால் கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வீட்டிற்கே சென்று செயற்கை கருவூட்டல் பயிற்சி, தடுப்பு பூசி ஆகியன அளித்து வருகின்றனர். இது குறித்து, திருத்தணி கால்நடை உதவி இயக்குனர் கூறுகையில், ஊரடங்கால் அனைத்து கால்நடை மருந்தகங்கள் மற்றும் கிளை நிலையங்கள் காலை, 8.00 மணி முதல், மதியம், 12.30 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. மேலும் அவசர உதவி எனில் இருப்பிடங்களுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.

கால்நடை விவசாயிகள் மற்றும் செல்ல பிராணி வளர்ப்பவர்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தேவைப்பட்டால் கால்நடை உதவி இயக்குனர், 98945 56477 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.   அருகிலிருக்கும் கால்நடை மருந்தகம் மற்றும் கிளை நிலையத்தில் இருந்து, மருத்துவரோ அல்லது ஆய்வாளரோ அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவித்தார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)