Blogs

Tuesday, 30 November 2021 05:08 PM , by: R. Balakrishnan

Petrol as a wedding gift

மணமக்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான எரிபொருள் கூப்பன்களை பரிசாக வழங்குங்கள் என, இந்தியன் ஆயில் (Indian Oil) நிறுவனம் அறிவித்துள்ளது.

பரிசுக் கூப்பன் (Price Coupon)

பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் 'ஒன் பார் யு' என, அழைக்கப்படும் பரிசு திட்டம் தீபாவளிக்கு அறிமுகமானது. இதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பிக்கொள்ளும் எரிபொருள் கூப்பனை, நண்பர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கும் முறை துவங்கியது. இந்த கூப்பன், குறைந்தபட்சம் 500 முதல், அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது.

இத்திட்டம் மக்களிடம் முழுமையாக சென்றடைய தற்போது புதிய வழிகாட்டுதலை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி உறவினர் மற்றும் நண்பர்கள் திருமணத்திற்கு பரிசளிக்க விரும்புவோர், கூப்பன்களை வழங்கலாம். அதனை பயன்படுத்தி, அவர்கள் பெட்ரோல் அல்லது டீசலை பெறலாம்.

எரிபொருள் கூப்பன்

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் சமூக வலைதளத்தில் கூறி உள்ளதாவது: உங்கள் அன்புக்குரியவர்களின் புதிய துவக்கங்களை மிக சிறப்பானதாக மாற்றுங்கள். திருமணங்களை கொண்டாட சிறந்த பரிசாக இந்தியன் ஆயில் நிறுவன எரிபொருள் கூப்பன் உள்ளது. அவற்றை 'ஆன்லைன்' வாயிலாக பெற்று உங்கள் அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் அனைவருக்கும் பரிசளியுங்கள்.

மேலும் படிக்க

குப்பையில் கிடந்த தங்கம்: போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்!

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தால் ரூ.5,000 பரிசு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)