பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 10 April, 2022 2:22 PM IST
PF members: 10 rules you need to know

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பிஎஃப்) வட்டி விகிதம் சமீபத்தில் குறைக்கப்பட்டது தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. தற்போது வட்டி விகிதம் 8.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இது மட்டுமல்லாமல், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு பேரதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. இதுவரை ஊழியர்களின் சம்பள பணத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

நிறுவனமும் ஊழியர்கள் கொடுக்கும் தொகைக்கு இணையான தொகையை டெபாசிட் செய்து வந்தது. அதில் ஊழியர்களுக்கு வரி விலக்கு கிடைத்தது. ஆனால் ஏப்ரல் 1ம் தேதி முதல் வருங்கால வைப்பு நிதி ஆணையம் செய்துள்ள மாற்றங்களின் படி, வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பிற்கு வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

EPF விதிகள் (EPF Rules)

தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 12 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் பிஎஃப் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வரி செலுத்த வேண்டும். புதிய EPF விதிகள் பற்றி சந்தாதாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள்

  • புதிய விதியால் அனைத்து சந்தாதாரர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
  • புதிய விதிகளின்படி, ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் சேமிக்கும் முதலீட்டாளர்கள் பிஎஃப் சேமிப்பிற்கான வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.
  • ஊழியர்களால் PF கணக்கில் வரவு வைக்கப்படும் அனைத்து வட்டியும் ஒரு வருடத்தில் 2.5 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் வரி விலக்கு அளிக்கப்படும்.
  • நிபுணர்களின் கூற்றுப்படி, புதிய விதி மாற்றம், அதிக வருங்கால வைப்பு நிதியை டெபாசிட் செய்யும் அளவிற்கு அதிக சம்பளம் பெறுபவர்களை பாதிக்கும் எனக்கூறப்படுகிறது.
  • 2021ம் ஆண்டிற்கான பட்ஜெட்டிற்கு முன்பு வரை, வருங்கால வைப்பு நிதி மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி இல்லாததாக இருந்தது.
  • முதலாளிகள் பிஎஃப் கணக்கிற்கான தங்களது பங்களிப்பை செலுத்தாவிடில், சந்தாதாரர்கள் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமான சேமிப்பின் மீதான வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.
  • பிஎஃப் கணக்குகள் மூலம் கிடைக்கும் வட்டி மீதான வரி ஒவ்வொரு வருடமும் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் சேமிப்புக்கு மட்டுமே விதிக்கப்படும்.
  • புதிய மாற்றத்தை நடைமுறைக்கு கொண்டு வர, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) IT விதிகளில் புதிய பிரிவு 9D ஐ சேர்த்துள்ளது.
  • EPF சேமிப்பின் மீதான வரிகளைக் கணக்கிடுவதை எளிதாக்க, தற்போதுள்ள PF கணக்குகளில் இரண்டு தனித்தனி கணக்குகள் உருவாக்கப்படும்.
  • ஒரு கணக்கில் ரூ.2.5 லட்சம் வரை சேமிப்பு இருக்கும், மற்றொன்று ரூ.2.5 லட்சத்துக்கு மேல் முதலீடுகளைக் கொண்டிருக்கும்.

மேலும் படிக்க

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் மாற்றமில்லை: மத்திய அரசு!

வட்டி விகிதம் உயர வாய்ப்பு இருக்குமா? ரிசர்வ் வங்கி ஆலோசனை!

English Summary: PF members: 10 rules you need to know!
Published on: 10 April 2022, 02:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now