Credit : Odisha Bytes
ஒடிசாவில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட யானையை மீட்கும் பணியில் வீரர்களுடன் ஈடுபட்ட செய்தி புகைப்படக்காரர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துயரச்சம்பவம் (Tragedy)
வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்கள் மீட்கப்பட வேண்டும் என பலரும் விரும்புவார்கள். ஆனால், களத்தில் இறங்கிக் காப்பாற்ற ஒருசிலர் மட்டுமே முன்வருவர். அவ்வாறு மீட்கப் புறப்பட்டவர்கள் அதே நீரில் மூழ்கி பலியான சம்பவங்கள் எப்போதாவது நிகழ்கின்றன. அப்படியொரு சம்பவம் இது.
மகாநதி
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் மகாநதி ஓடுகிறது. முண்டாலி என்ற பகுதியில், நதி நீரில் தண்ணீர் பருக வந்த யானை ஒன்று, எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்துத் தகவலறிந்த ஒடிசா பேரிடர் விரைவு மீட்புக்குழு யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டது. அவர்களுடன் அரிந்தம் என்ற செய்தி புகைப்படக்காரரும் ஈடுபட்டார்.
வெள்ளத்தில் சிக்கிய யானை (Elephant trapped in the flood)
ஆற்றின் ஆழமான பகுதிக்கு யானை இழுத்துச் செல்லப்பட்டதால், அந்தப் பகுதி நோக்கி, மீட்புக்குழு படகில் சென்றது. அப்போது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் செய்தி புகைப்படக்காரர் அரிந்தமும், நீரில் மூழ்கி பலியானார்.
4 பேருக்கு சிகிச்சை (Treatment for 4 people)
மேலும், அதிரடி மீட்புக் குழுவில் உள்ள வீரர் ஒருவர் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 3 வீரர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அனைவர் மனதிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...