Blogs

Tuesday, 30 August 2022 07:13 PM , by: Elavarse Sivakumar

பிள்ளையார் சதுர்த்தி விழாவின்போது, காப்பீடு செய்வது கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், 300 கோடிக்கு விநாயகர் சதுர்த்தி விழா காப்பீடு செய்யப்பட்டிருப்பது, பக்தர்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் கிங்ஸ் சர்க்கிள் பகுதியில்தான் இத்தனை காஸ்ட்லி. இங்குக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவே, 316 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மஹாராஷ்டிராவில் மிகச் சிறப்பாக கொண்டாடுவர்.

10 நாட்கள் விழா

மும்பையில் ஜி.எஸ்.பி.,சேவா மண்டல் என்ற அமைப்பின் சார்பில், கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் மிகப் பிரமாண்ட விநாயகர்சிலை வைத்து, 10 நாட்களுக்கு விழா நடத்தப்படும். இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர்.

தங்கம், வெள்ளிப் பந்தல்

கிங்ஸ் சர்க்கிளில் இந்த ஆண்டு நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழா, 316.4 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பந்தல், மண்டபத்துக்கு மட்டுமின்றி தன்னார்வலர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

காப்பீடு

கிங்ஸ் சர்க்கிளில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டுமே காப்பீடு செய்யப்பட்டாலும், முன் எப்போதும் இல்லாத வகையில், இத்தனைக் கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.

மேலும் படிக்க...

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.1,000 உயர்வு!

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் விதைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)