மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 February, 2021 5:08 PM IST

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி தனது முதல் காகிதமற்ற டிஜிட்டல் மத்திய பட்ஜெட்டை 2021-22 ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆறு தூண்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த மத்திய பட்ஜெட்டில் 2021-22 பல புதிய திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் 2021-22 உரையில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு கூடுதலாக 1 கோடி மக்களை இணைக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார். எனவே பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. உடனடியாக இணைந்துகொள்ள அறிவறுத்தப்படுகிறார்கள். இந்த திட்டம் குறித்தும், அதில் எப்படி இணைவது குறித்தும் இதில் விரிவாக பார்க்கலாம்.

பிரதான் மந்திரி உஜ்வால யோஜனா

வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக 2016ஆம் ஆண்டு மே 1ஆம் தேதியன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை மோடி அரசு அறிமுகம் செய்தது. நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஐந்து கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்கும் நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.8,000 கோடியை ஒதுக்கியது. சுகாதாரமான எரிவாயுவை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.

நிபந்தனைகள்

  • இத்திட்டத்தின் கீழ் இலவச சமையல் சிலிண்டர் வாங்குவதற்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த வயது வந்த பெண், ஏற்கெனவே சமையல் சிலிண்டர் இணைப்பு இல்லாதிருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர் இந்தியக் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.

  • பெண்ணின் பெயரிலேயே சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.

  • விண்ணப்பதாரர் வேறு எந்த சமையல் சிலிண்டர் திட்டத்திலும் பயனாளியாக இருக்கக்கூடாது.

  • பட்டியல் வகுப்பு/பழங்குடியின குடும்பங்கள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், அந்த்யோத்யா அன்ன யோஜனா, காட்டு வாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை மற்றும் முன்னாள் தேயிலைத் தோட்ட பழங்குடியினர், நதியோர தீவுகளில் வசிக்கும் மக்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் கீழ் பயனாளிகள் கண்டறியப்படுகின்றனர்.

 

விண்ணப்பிப்பது எப்படி?

  • பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான பெண்கள் வேட்பாளர்கள் உஜ்வாலா யோஜனா விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

  • முறைப்படி 2 பக்க விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை படிவத்துடன் இணைக்க வேண்டும்.

  • படிவத்துடன் பெயர், தொடர்பு விவரங்கள், ஜன தன் / வங்கி கணக்கு எண், ஆதார் அட்டை எண் போன்றவை தேவை.

  • விண்ணப்பதாரர்கள் சிலிண்டர் வகை அதாவது 14.2KG அல்லது 5KG இன் தேவையையும் குறிப்பிட வேண்டும்.

  • உஜ்வாலா யோஜன திட்டத்திற்கு KYC விண்ணப்ப படிவங்களும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்டு தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள LPG விற்பனை நிலையத்தில் சமர்ப்பிக்கலாம்.

எல்பிஜி விநியோகத்தின் தற்போதைய நிலை

இந்தியாவில் 24 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன, அவற்றில் சுமார் 10 கோடி குடும்பங்கள் எல்.பி.ஜி சமையல் எரிவாயு இல்லாமல் விறகு, நிலக்கரி, சாணம் போன்றவற்றை கொண்டு சமையல் வேலைகளை செய்து வருகின்றனர்.

மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பின் மூலம் வரும் நிதியாண்டில் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதலா ஒரு கோடி குடும்பங்கள் இணைக்கப்பட உள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கு 12 எரிவாயு சிலிண்டர்களை மானிய விலையில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

சோலார் மின்வேலிக்கு மானியம் அறிவிப்பு! - விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்களும் வரவேற்பு!!

கடைகோடி விவசாயிக்கும் நன்மை பயக்கும் "இ-நாம்" எனும் "ஒரே நாடு ஒரே சந்தை" ஆப்!

ரூ.12,000 கோடி விவசாயப் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்தது தமிழக அரசு

 

English Summary: PM Ujjwala Yojana scheme to Cover more 1 Crore People, Apply to get free Gas connection
Published on: 05 February 2021, 05:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now