தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மனிதர்கள் மட்டுமல்லாது கால்நடைகளும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், நூற்றுக்கணக்கான குளங்களும், 289 ஏரிகளும், செய்யாறு, பாலாறு, வேகவதி என, மூன்று ஆறுகளும் பாய்கின்றன. இவையனைத்தும் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. இத்தனை நீர் ஆதாரங்கள் இருந்தாலும், முறையான பராமரிப்பு, தூர்வாரால் போன்ற நடவெடிக்கைகள் மேற்கொள்ள படாததால் பருவ மழையானது வீணாகிறது.
ஒவ்வோர் ஆண்டும், பருவமழை சமயத்தில் பொழியும் மழை நீர் நீர்நிலைகளில் நிரம்பி வழியும் தண்ணீர், அடுத்த ஒன்றிரண்டு மாதங்களிலேயே, காணாமல் போகிறது. கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில், தற்போதே நீராதாரங்களின் நிலை மோசமாகி வருகிறது. ஒரு சில நீர் நிலைகள் பாசனதிற்கு பயன்படவில்லை என்றாலும் கால்நடைகளின் தாகத்தை தனித்து வந்தன. ஆனால், அவையும் வறண்டு வருவதால் கோடையில், கால்நடைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதே நிலை தான் மற்ற மாவட்டங்களிலும் தொடர்வதால் அரசு மற்றும் பொதுப்பணித்துறையினர் தேவையான நடவெடிக்கை எடுக்க வேண்டும்.