பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 12 February, 2022 11:30 AM IST
Post Office payments bank New Rules

போஸ்ட் ஆபீஸின் கீழ் செயல்படும் இந்த இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியில் (India Post Payments Bank) பலரும் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு கணக்குகளை தொடர்கின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை பார்க்க முடிகிறது. இந்நிலையில் ஏற்கெனவே ஜனவரி 1 மற்றும் பிப்ரவரி 1 முதல் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வருவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது மற்றொரு அப்டேட்டும் வெளியாகியுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

கூடுதல் கட்டணம் (Extra Charges)

வரும் மார்ச் 5 முதல் போஸ்ட் பேமெண்ட் வங்கியின் சேமிப்புக் கணக்குகளுக்கான விதிமுறை மாறுகிறது. இதன்படி, சேமிப்புக் கணக்குகளை மூடுவதற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கை மூட வேண்டுமெனில் அதற்கு தனியாக 150 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் சேர்த்து செலுத்த வேண்டும். இந்த புதிய மாற்றம் டிஜிட்டல் சேமிப்புக் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு,போஸ்ட் ஆபீஸ் வங்கி ஒரு வரம்புக்கு மேல் பணத்தை எடுப்பதற்கும் டெபாசிட் செய்வதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை எடுக்கும்போதும் குறைந்தபட்சம் ரூ.25 செலுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தது. இந்த புதிய மாற்றம் ஜனவரி 1, 2022 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. வரம்பை விட அதிகமாக டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

வட்டி விகிதம் (Interest Rate)

அதே போல், சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் அறிவித்திருந்தது. ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புகளுக்கு வட்டி விகிதம் 2.25 சதவீதமாக இருக்கும். அதேபோல, ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.2 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 2.50 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ரெப்போ வட்டியில் மாற்றம் இல்லை: ‘ரிசர்வ் வங்கி’ அறிவிப்பு!

நல்ல செய்தி காத்திருக்கிறது: பென்சன் தொகை உயர வாய்ப்பு!

English Summary: Post Office Bank's new rule: Customers in shock!
Published on: 12 February 2022, 11:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now