இன்றைய முதலீடு நாளைய சிறந்த வாழ்க்கைக்கான திறவுகோல் என்பதில் மாற்றமில்லை. அஞ்சல் அலுவலக சேமிப்பு என்பது மிகவும் நம்பிக்கைக்குரிதாக கருதப்படுகிறது. வங்கிகளை காட்டிலும் தபால் அலுவலக சேமிப்புகள் அதிக வட்டி விகிதங்களை வழங்கி நம் லாபத்தையும் அதிகரிக்கிறது. அஞ்சல் அலுவலகங்களில் உள்ள சேமிப்புத் திட்டங்கள் மற்றும் நடைமுறை திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
அஞ்சலக நேர வைப்பு கணக்கு
அஞ்சல் அலுவலக நேர வைப்பு கணக்கில் குறைந்தது ரூ. 200 முதல் முதலீடு அல்லது சேமிப்பு செய்யலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வட்டி காலாண்டு (3 மாதங்களுக்கு ஒரு முறை) வாரியாக கணக்கிடப்பட்டு ஆண்டிற்கு ஒருமுறை உங்கள் சேப்பில் வரவு வழங்கப்படும்.
வட்டி விகிதம்
-
ஒரு வருடம் முதலீடு செய்பவர்களுக்கு 7.1 சதவீத லாபமும்
-
2 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.2 சதவீதம் வரை லாபமும்
-
3 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.4 சதவீதம் வரை லாபமும்
-
5 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.9 சதவீதம் வரை வட்டியும் லாபமாகப் பெறலாம்.
அஞ்சல் அலுவலக மாத வருமான திட்ட கணக்கு
அஞ்சல் அலுவலகத்தின் மாத வருமான திட்ட கணக்கின் மூலம் முதலீடு செய்யும் போது மாதந்தோறும் செலுத்தி வரும் தொகைக்கு 7.80% வரை லாபம் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது தனிநபராக இருந்தால் அதிகபட்சம் ரூ. 4.5 லட்சம் வரையும், அதுவே கூட்டு கணக்கு திட்டமாக இருந்தால் ரூ.9 லட்சம் வரையும் முதலீடு செய்யலாம்.
வருங்கால வைப்பு நிதி கணக்கு
அஞ்சல் அலுவலகத்தில் உள்ள அனைத்து சேமிப்பு கணக்கையும் ஒப்பிடுகையில் இதுவே அதிக லாபம் அளிக்கக் கூடிய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மாதத்திற்குக் குறைந்தது பட்சம் 500 ரூபாய் முதல் வருடத்திற்கு அதிகபட்சம் ரூ. 1,50,000 வரையிலும் முதலீடு செய்யலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால் முதிர்ச்சி காலம் முன்பே திரும்பிப் பெறும் வசதி கிடையாது. இத்திட்டம் மூலம் பெறும் லாபத்திற்கு வரி ஏதும் கிடையாது. அதுமட்டும் இல்லாமல் 3 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் போது கடன் பெறும் வசதியும் உண்டு.
தேசிய சேமிப்பு பத்திரம் (National Savings Bond)
அஞ்சல் துறையில் உள்ள பல சேமிப்புத் திட்டங்களைப் போன்று தேசிய சேமிப்பு பத்திர திட்டமும் ஒன்று. இந்தத் திட்டத்தில் வங்கிகளை விட அதிகமான வட்டியைப் பெறலாம். பொதுத் துறை வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை விட குறைந்தது 0.5 சதவீதம் அதிக வட்டியை இத்திட்டத்தில் பெறலாம். 8.1 சதவீதம் வரை லாபம் அளிக்கும் இத்திட்டத்திலும் வருமான வரியில் இருந்து வரி விலக்கைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
ஆண் குழந்தையுடன் அப்பாக்களுக்கும் லாபம் அள்ளித் தரும் "பொன்மகன் சேமிப்புத் திட்டம்"!!
லட்சாதிபதி ஆகனுமா? இந்த அஞ்சலகத் திட்டத்தில் சேருங்க!
அஞ்சலக சேமிப்புக் கணக்கிலும், இனி அரசு மானியங்களைப் பெறலாம் - விபரங்கள் உள்ளே!