செடி அவரையை பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பட்டங்கள் எதையும் சார்ந்து இல்லாமல் நிலையான வருமானம் தரும் தோட்டக்கலை பயிராக செடி அவரை இருந்து வருகிறது. தினசரி சந்தைகள் மற்றும் வார சந்தைகளில் அவரைக்காய்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் நிலையான வருவாய் வருமானம் கிடைக்கும் என தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம், பேரையூர் பகுதிகளில் போதிய பருவமழை இல்லாததால் விவசாயிகள் குறைந்த நீர் பாசனத்தில் அதிக பலன் மற்றும் ஆண்டு முழுவதும் வருவாய் தரக்கூடிய செடி அவரைக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்ய துவங்கினர்.
செடி அவரையை பொருத்தவரை விதைத்த 2வது மாதத்தில் இருந்து பலன் தொடங்கும். தொடர்ந்து 4 மாதம் வரை மகசூல் தரும். மாதத்திற்கு 200 கிலோ முதல் 250 கிலோ வரை கிடைக்கிறது. சந்தையில் ஒரு கிலோ ரூ.20 வரை விற்பனையாகிறது. இதன் மூலம் ரூ.1.92 லட்சம் வரை வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.