பெற்றோரின் சொல் கேட்காமல், நாகரீக மோகத்தால் கவர்ந்திழுக்கப்படும் இளைஞர்கள், மற்றவர்கள் முகம் சுழிக்கும் வகையிலான புள்ளிங்கோ சிகையலங்காரத்தைச் செய்துகொள்கின்றனர்.
சிகை அலங்காரம் (Hairstyle)
இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் ஸ்டைலாக முடிவெட்டும் போக்கு உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் நடிகர்கள், விளையாட்டு வீரர்களின் சிகை அலங்காரம் போல தாங்களும் முடிவெட்டிக் கொண்டு ஸ்டைலாக வலம் வருகின்றனர்.
புள்ளிங்கோ
அந்த வகையில் பாக்ஸ் கட்டிங், ஒன் சைட், வி கட், ஸ்பைக் எனப் பல பெயர்களில் முடிவெட்டிக்கொள்ளும் இளைஞர்களை புள்ளிங்கோ என்று அழைக்கின்றனர்.
இந்த புள்ளிங்கோ சிகை அலங்காரம் வேலூரில் பரவலாகி வருகிறது. மாடர்னாக பார்க்கப்படும் இந்த சிகை அலங்காரம் வினோதமாகவும் ஒழுங்கின்மையாகவும் பார்க்கப்படுகிறது. ஆனாலும், இது போன்ற ஹேர் ஸ்டைலுக்கும் வேலூரில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அவர்களும் மாடர்னாக முடிவெட்டிக்கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.
பள்ளி நிர்வாகம் மறுப்பு (School administration denies)
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் புள்ளிங்கோ கட்டிங் செய்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர். 5 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் இது போன்ற தலை முடி சிகை அலங்காரம் செய்து சுற்றி வந்தனர். பள்ளி திறந்ததும் அதே சிகை அலங்காரத்தில் பள்ளிக்கு வர தொடங்கினர்.
தலைமை ஆசிரியர் அதிரடி (Head Master Action)
100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இது போன்ற புள்ளிங்கோ கட்டிங் செய்துள்ளதால் பள்ளி தலைமை ஆசிரியர் நெப்போலியன் அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்ய முடிவு செய்தார். இதன்படி, முடிதிருத்தும் தொழிலாளர்கள் 2 பேரை பள்ளிக்கு வரவழைத்து அவர்கள் மூலம் புள்ளிங்கோ கட்டிங் செய்திருந்த மாணவர்களை வரிசையாக மரத்தடியில் நிற்க வைத்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் மூலம் சிகை அலங்காரம் சீரமைக்கப்பட்டது.
சீக்ரட் ஆப்ரேஷன் (Secret Operation)
முதற்கட்டமாக 11 மற்றும் 12வது படிக்கும் மாணவர்கள் 100 பேருக்கு இந்த சீக்ரட் ஆப்ரேஷன் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கற்பிக்கும் கோவிலாகக் கருதப்படும் பள்ளிக்கு வரும்போது, அதற்கான விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதுதானே முறை. அப்படி விதியை மீறியப் பள்ளி மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் தங்கள் ஸ்டைலில், பாடம் கற்பித்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க...
தங்கச்சங்கிலியைத் தலை முடியாக மாற்றியப் பாடகர்!
ரூ.2 லட்சத்தைப் பறித்தக் குரங்கு-பணமழை பொழிந்து அழிச்சாட்டியம்!