சொந்த வீடு என்பது பலருக்கும் பெரும் கனவாக இருக்கும். வீட்டுக் கடன் (Housing Loan) வாங்குவதற்கு முன் குறைந்த வட்டிக்கு கடன் வாங்க முயற்சிப்பது மிக அவசியம். ஏற்கெனவே சில வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்குகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) வீட்டுக் கடன்களுக்கான வட்டியை குறைத்து அறிவித்துள்ளது. இத்தகவல் வீட்டுக் கடன் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு மகிழ்ச்சி செய்தியாக வெளிவந்துள்ளது.
வட்டி குறைப்பு
வீட்டுக் கடன்களுக்கான ஓராண்டு MCLR வட்டி விகிதத்தை 0.05% குறைத்து 7.30% ஆக குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுபோக மூன்று மாத, ஆறு மாதங்களுக்கான MCLR வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கான MCLR வட்டி 7 விழுக்காடாகவும், ஒரு ஆண்டுக்கான MCLR வட்டி 7.30% ஆகவும், முன்று ஆண்டுகளுக்கான MCLR வட்டி 7.60% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
வீடு வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க
பணம் எடுப்பதில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது SBI
மிகச் சிறந்த வைப்பு நிதி திட்டத்தை எப்படி தேர்வு செய்யலாம்?