வெறும் ₹699-க்கு மாசத்துக்கு 10 படம் பார்க்கலாம்னு சொன்னா நம்புவீங்களா? சந்தேகமே வேண்டாம் இனி உங்களால் PVR INOX Passport திட்டத்தின் கீழ் பார்க்க முடியும். லியோ, சலார், டங் என அடுத்தடுத்து பெரிய படங்கள் திரைக்கு வர உள்ள நிலையில் சினிமா ரசிகர்களிடையே இத்திட்டம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்தியாவின் முன்னணி திரையரங்கு நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ் லிமிடெட் சனிக்கிழமையன்று 'பிவிஆர் ஐநாக்ஸ் பாஸ்போர்ட்' திட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்தது. சினிமா பிரியர்களைத் தொடர்ந்து திரையரங்குகளுக்கு வருகை தருவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த சந்தா பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சில கண்டிஷன்களுடன் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
- PVR INOX Passport என்கிற மாதாந்திர சந்தா பாஸ் அக்டோபர் 16 முதல் கிடைக்கும். இந்தச் சந்தாவுக்கான மாதத் தொகை ₹699.
- இந்த பாஸினை கொண்டு மாதம் 10 திரைப்படங்களை பார்க்க இயலும்.
- இந்த சந்தா பாஸினை திங்கள் முதல் வியாழன் கிழமை இடையேயான நாட்களில் மட்டுமே திரைப்படத்தை பார்க்க பயன்படுத்த இயலும்.
- அதிலும் ICE, IMAX, 4DX, Playhouse, GOLD, LUXE, P[XL], Drive-In, Director's Cut, BigPix, Kiddles, MX4D, ScreenX, Insignia போன்ற பிரத்யேக திரையரங்கில் பார்க்க பயன்படுத்த இயலாது.
- பாஸினை ஒரு படத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த இயலும். உதாரணத்திற்கு லியோ படத்தினை பார்க்க இந்த பாஸினை பயன்படுத்தி விட்டால், மறுமுறை லியோ படத்திற்கு பயன்படுத்த இயலாது.
- கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா என்கிற கேள்விக்கும் பதில் கிடைத்துள்ளது. உதாரணத்திற்கு இந்த பாஸீனை கொண்டு படத்திற்கான டிக்கெட் தொகையினை செலுத்த வேண்டாம். ஆனால் அதே நேரத்தில் ஆன்லைன் புக்கி்ங் போது வசூலிக்கப்படும் convenience சார்ஜ் இந்த பாஸீல் அடங்காது.
- மேலும் சிறப்பு தினங்கள், அரசு பொது விடுமுறை தி்னங்களில் இந்த பாஸீனை பயன்படுத்த இயலாது.
- நேரடி புக்கிங் கவுண்டரில் இதனை பயன்படுத்த இயலாது. ஆன்லைன் மூலமாக மட்டுமே இந்த பாஸினை பயன்படுத்த இயலும்.
- PVR பாஸ்போர்ட்டை பயன்படுத்தி திரைப்படம் பார்க்க விரும்புவோர், அரசு வழங்கிய ஏதாவது ஒரு அடையாள ஆவணத்தை காட்ட வேண்டும். டிக்கெட் மாற்றத்தக்கத்தல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PVR INOX Ltd -ன் இணை தலைமை நிர்வாக அதிகாரி கௌதம் தத்தா கூறுகையில், ” நிறுவனம் வாடிக்கையாளர்களின் திரைப்படம் பார்க்கும் பழக்கத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த திட்டம் உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். டிஜிட்டல் தளங்கள் பெருகிவிட்ட நிலையில், பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் மற்றும் சில விருப்பமான படங்களை பார்க்க மட்டுமே தற்போது ரசிகர்கள் திரையரங்கு வருகிறார்கள். ”
”ஒரு மாதத்திற்கு குறைந்தது 15 முதல் 20 திரைப்படங்கள் வரை வெளியாகிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் சிறு பட்ஜெட் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைகின்றனர்.
இப்போது நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள திட்டம், திரையரங்கு ரசிகர்கள் வருவதை அதிகரிக்கும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். PVR INOX சமீபத்தில் உணவு மற்றும் பானங்களின் விலையை 40 சதவீதம் வரை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை- 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை