வாத்துகளின் வரத்துக் குறைந்து அவற்றின் இறைச்சி மற்றும் முட்டை விலை உயர்ந்ததை அடுத்து வாத்து இறைச்சி விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அசைவ உணவு வகைகளில் ஆடு, கோழி, மீன் இவற்றிற்கு அடுத்த படியாக வாத்து இடம் பெற்றிருப்பதால் இதற்கான தேவையும், சந்தையும் அதிகரித்துள்ளது.
வாத்து இறைச்சியில் மருத்துவ குணம் நிறைந்து இருப்பதால் வாத்து முட்டை மற்றும் இறைச்சி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுவாச சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஏற்ற மருந்தாக கூறப் படுகிறது. குறிப்பாக மூச்சிரைப்பு, சளி உள்ளிட்ட நோய்களை குணமாக்குகிறது. ரூ.10க்கு விற்பனையாகி வந்த வாத்து முட்டை தற்போது ரூ.12 முதல் ரூ.14 வரை விற்பனை செய்ய படுகிறது.
கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து விற்பனைக்காக வாத்துகள் தமிழகம் கொண்டு வரப்படுகின்றன. கடந்த மாதம் வரை ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையாகி வந்த வாத்துகள் தற்போது வெளிமாநிலங்களில் இருந்து வருவதால் அதிகபட்சமாக ஆண் வாத்து ரூ.250க்கும், பெண் வாத்து ரூ.300க்கும் விற்பனையாகி வருகின்றன. ஞாயற்று கிழமை போன்ற விடுமுறை நாட்களில் அதிக அளவு விற்பனையாவதால் வாத்து இறைச்சி விற்பனையாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.