BSF எனப்படும் எல்லைப் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பலரது கனவு (The dream of many)
மத்திய அல்லது மாநில அரசில் பணியாற்ற வேண்டும் என்பதுவே நம்மில் பலரது கனவாக இருக்கும். ஏனெனில் அரசாங்க உத்யோகம், அசத்தும் அதிகாரம் ஆகியவை, சமூகத்தில் நமக்குத் தனி கவுரவத்தைப் பெற்றுத்தரும்.
முழுப் பணிப்பாதுகாப்பு என்பதுடன், ஆண்டு விடுமுறை உட்பட பல்வேறு சலுகைகளும் உண்டு. அதனால்தான் நம் முன்னோர்கள், அரைக்கஞ்சியானாலும் அரசாங்கக்கஞ்சி என்பார்கள்.
விரைவில் தேர்வு (Choose Selection)
அந்த வகையில், BSF எனப்படும் எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணிக்கு ஆட்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வாய்ப்பு (Opportunity to apply)
பி.எஸ்.எஃப் (BSF) Border Security Force நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி வாய்ப்பு கிடைத்துள்ளது.
புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாகக் கருதி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முன்வரலாம்.
http://www.bsf.gov.in என்ற பி.எஸ்.எஃப்பின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின்பு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதிக்கு முன்பாக தகுதியான பணிக்கு விண்ணப்பிக்கவும்.
நிறுவனத்தின் பெயர்
Border Security Force (BSF)
பணி (Job)
கான்ஸ்டபிள் (ஜெனரல் ட்யூட்டி)
காலியிடங்கள் (Vacancies)
269
விண்ணப்பிக்கக் கடைசி நாள் (Last Date for apply)
14.09.2021
பணி (Job)
இந்தியா முழுவதும்
விண்ணப்ப்பது எப்படி? (How to apply)
ஆன்லைன்
அதிகாரபூர்வ வலைத்தளம்
www.bsf.gov.in
கல்வித் தகுதி (Education Qualification)
விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age Limit)
18 முதல் 23 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
ஊதியம் (Salary)
ரூ 21,700 முதல் ரூ. 69,100 வரை (மாத சம்பளம்)
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
-
அதிகாரப்பூர்வ வலைத்தளமான bsf.gov.in தளத்திற்கு செல்லவும்.
உங்கள் பணிக்கு பொருத்தமான அறிவிப்பைக் கண்டுபிடித்து கிளிக் செய்யவும்.
-
அந்த அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.
-
ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
-
பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்கவும்.
-
பிறகு அதை நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பாகக் கொரோனாத் தொற்றுக் காலங்களில், நிதிச்சுமையைத் தவிர்க்கும் வகையில், தனியார் நிறுவனங்கள் பலத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து தங்கள் இரக்க குணத்தைக் காட்டின. இவற்றையெல்லாம் கருத்தில் எடுத்துக்கொண்டால், அரசு உத்யோகம் எப்போதுமே சிறந்தது.
மேலும் படிக்க...
குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு வெண்கலம்: லவ்லினா அசத்தல்!
கொரோனா தடுப்பூசி: 48 கோடி டோஸ் செலுத்தி இந்தியா புதிய சாதனை!