Blogs

Friday, 24 June 2022 05:35 AM , by: R. Balakrishnan

Ration - Aadhar Linking

ரேஷன் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ஜூன் 30ம் தேதி வரை காலக்கெடு வழங்கியது. வழங்கப்பட்ட கால அவகாசம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. ஆன்லைன் மூலம் எளிதாக ரேஷன் கார்டு – ஆதார் எண்ணை இணைக்கலாம்.

ரேஷன் – ஆதார் இணைப்பு (Aadhar - Ration Linking

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு வெளிமாநில தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளி மாநில ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் பயன்பெற ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்துடன் உங்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைப்பதற்கு அரசு காலக்கெடு வழங்கியது. முதலில் மார்ச் 31 ம் தேதி வரை ரேஷன் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது. வழங்கப்பட்ட காலக் கெடு முடிவடைந்த நிலையில் தற்போது மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு ஜூன் 30 2022 வரை வழங்கப்பட்டது. உணவு மற்றும் பொது விநியோகத் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இணைக்கும் வழிமுறை (Linking Methods)

  • முதலில் uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதில் ‘Start Now’ என்பதை கிளிக் செய்யவும்.
    அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் முகவரி, மாவட்டம் போன்ற விவரங்களை நிரப்பவும்.
  • இப்போது ‘Ration Card Benefit’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • அதன் பிறகு ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை நிரப்பி submit கொடுக்க வேண்டும். பிறகு உங்கள் ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டு இணைந்து விடும்.

மேலும் படிக்க

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை இணைப்பு: மத்திய அரசு!

வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: டெபாசிட் வட்டி உயர்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)