வருமான வரி செலுத்துபவர்கள், அதனைச் செலுத்தவேண்டியக் காலக்கெடு குறித்து அக்கறை செலுத்துவார்கள். ஆனால் வருமான வரி என்றால் என்னவென்றேத் தெரியாத ரிக்ஷா ஓட்டுனருக்கு 3 கோடி ரூபாய் வரி செலுத்த அறிவுறுத்தி, அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்.
நோட்டீஸ் (Notice)
பொதுவாக வருமான வரி செலுத்துவோர் சரியான காலக்கெடுவுக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை எனில், அவர்களுக்கு வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படுவது வழக்கம்.
வருமான வரித் தாக்கலில் ஏதேனும் விவரங்கள் பொருந்தவில்லை எனில், உங்களுக்கு பிரச்சனை ஏற்படலாம். ஆனால் உத்திரபிரதேசத்தில் உள்ள ரிக்ஷா ஒட்டுனர் ஓருவருக்கு 3 கோடி ரூபாய்க்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அந்த மாநிலத்தையே அதிர வைத்துள்ளது.
ரூ.3 கோடி நோட்டீஸ்
அமர் காலனி பகுதியில் வசித்து வருபவர் பிரதாப் சிங். ரிக்ஷா ஒட்டுனரான இவருக்குத்தான், வருமான வரித்துறையினர் 3 கோடி ரூபாய்க்கு வருமான வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த வருமான வரி நோட்டீஸை கண்டு அதிர்ச்சியடைந்த பிரதாப் சிங், அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
மோசடி (Fraud)
விசாரணையில், பிரதாப்பின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி வேறு ஒருவர், மோசடி செய்து தொழில் செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. பான் அட்டைக்குப் பிரதாப் விண்ணப்பித்தபோது, இவர் படிப்பறிவில்லாதவர் என்பதைத் தெரிந்துகொண்ட தொழில்நுட்ப நிபுணர்கள் சிலர், கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட பான் அட்டையைக் கொடுத்துவிட்டு ஒரிஜினலைச் சுருட்டிக்கொண்டுள்ளனர்.
பல கோடி வியாபாரம் (Multi crore business)
பின்னர் அந்த அட்டையைப் பயன்படுத்தி, பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து, மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
மோசடி செய்த நபர், பிரதாப்பின் பெயரில் ஜிஎஸ்டி பதிவு செய்து, வியாபாரம் செய்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.
ஆக தொழில்நுட்ப அதிகாரிகள் தன்னை போலியாக ஆள்மாறாட்டம் செய்து, மோசடி செய்துள்ளதாக தனது எஃப்.ஐ.ஆரில், பிரதாப் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...