Blogs

Thursday, 23 June 2022 09:59 PM , by: Elavarse Sivakumar


விலைவாசி உயர்வை சமாளிக்க ஏதுவாக, தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் வரை போனஸ் வழங்க இந்த தனியார் நிறுவனம் முன்வந்திருக்கிறது. இதன்மூலம் அந்த நிறுவனம் தனது ஊழியர்கள் நலனில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்து வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ளன. பணவீக்கத்தை சமாளிப்பதற்காக சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குகின்றன.

மகிழ்ச்சி

இந்நிலையில், பிரிட்டனை சேர்ந்த புகழ்பெற்ற கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) தனது ஊழியர்களுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் போனஸ், சம்பள உயர்வு போன்றவற்றை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது.
இது ரோல்ஸ் ராய்ஸ் ஊழியர்களை மகிழ்ச்சியில் உறையச் செய்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது சுமார் 14000 ஊழியர்களுக்கு 2000 பவுண்ட் (1.92 லட்சம் ரூபாய்) போனஸ் தொகை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதுமட்டுமல்லாமல், 11000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, சம்பள நிலுவைத் தொகை ஆகியவற்றையும் சேர்த்து வழங்குகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது ஷாப் ஃப்ளோர் ஊழியர்கள் 11,000 பேருக்கும், ஜூனியர் மேனேஜர்கள் 3000 பேருக்கும் 2000 பவுண்ட் போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுபோக ஷாப் ஃப்ளோர் ஊழியர்கள் 11000 பேருக்கு போனஸ் தொகையுடன் சேர்த்து 4% சம்பள உயர்வும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

Whats-appல் கூட கடன் பெற முடியும்- அதுவும் 30 நொடிகளில்!

ரேசன் கடை ஊழியர்களுக்கு 14%அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு உத்தரவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)