கேரளாவில் காரில் சென்றவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என போலீசார் அபராதம் விதித்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சாலைகளில் போக்குவரத்து காவலர்கள் அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு ஈடுபடும்போது, அப்பகுதி வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்வது உண்டு. அதேபோல, சாலைவிதிகளை மீறி சாலையில் செல்லும் வாகனங்களுக்கு ஆபராதமும் வசூலிப்பார்கள். ஆனால் சில நேரங்களில் அதில் தவறுகளும் நடந்துவிடக்கூடும்.
சமீபத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அஜித் என்பவர் தனது மாருதி ஆல்டோ காரில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போலீசார் அவர் காரில் செல்லும் போது ஹெல்மெட் அணியவில்லை என கூறி அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.
சாலை விதிகளின்படி இரு சக்கர வாகனங்களுக்கு தான் ஹெல்மெட் கட்டாயம். இருப்பினும், காரில் செல்பவர்களுக்கு சீட் பெல்ட் தான் கட்டாயம்.
ஆனால் இந்த சம்பவத்தில் போலீசார் காரில் வந்தவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றுக்கூறி அபராதம் விதித்தனர்.
இதையடுத்து இந்த அபராத தொகையை கட்ட மறுத்த அஜித் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க...
அடுத்த வாரம் அசானி புயல்- வங்கக்கடலில் உருவாகிறது!
ரத்தத்தில் சர்க்கரைக் கட்டுப்படுப்படுத்தும் வெண்டைக்காய் வாட்டர்!