குழந்தை பெற்றுக்கொள்வதில், கட்டுப்பாடுகளை விதித்திருந்த சீன அரசு, தற்போது 3-வது குழந்தைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ. 57 ஆயிரம் நிதியதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
முதலிடம் (First place)
மக்கள் தொகையில், உலக நாடுகளில் முதலிடம் வகிக்கும் சீனா, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒரு குழந்தைத் திட்டத்தை அமல்படுத்தியது.
3- வது குழந்தைத் தடை (3rd child ban)
ஆனால் ஒருகட்டத்தில், முதியோர் எண்ணிக்கை அதிகமாகவும், இளையத் தலைமுறையினரின் எண்ணிக்கைக் குறையவும் ஆரம்பித்தது.
இதையடுத்து 2 குழந்தைகள் திட்டத்தை அமல்படுத்தியது. எனினும், ஒரு தம்பதி 3- வது குழந்தைப் பெற்றுக்கொள்ளத் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் கடந்தாண்டு சீனாவில் இருந்து கொரோனா தொற்றுப் பரவியதை அடுத்து, இனிவரும் ஆண்டுகளில் அங்கு இளம் வயதினர் எண்ணிக்கை குறையும் ஆபத்தை உணர்ந்து, 3 -வது குழந்தையைப் பெற்றெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பண உதவி (Cash assistance)
இந்நிலையில் 3- வது குழந்தை பெற்றெடுத்தால் அரசின் பண உதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரித்திருப்பதாவது:
3-வது குழந்தை பிறந்தால் ரூ. 57 ஆயிரம் ரொக்கத்தொகையும், அந்தக் குழந்தை குறிப்பிட்ட வயதை எட்டியதும் ரூ. 1 லட்சம் பெற்றோருக்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பு தம்பதிகளை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது. நம்ம ஊர் பழமொழியாகச் சொன்னால், கரும்புத் தின்னக் கூலியா என்பதுபோல் உள்ளது இந்த அறிவிப்பு.
மேலும் படிக்க...
தங்கச்சங்கிலியைத் தலை முடியாக மாற்றியப் பாடகர்!
ரூ.2 லட்சத்தைப் பறித்தக் குரங்கு-பணமழை பொழிந்து அழிச்சாட்டியம்!