Blogs

Monday, 13 December 2021 12:28 PM , by: Elavarse Sivakumar

Credit: Samayam Tamil

உங்களிடம் இந்த ரூபாய் நோட்டு இருந்தால் அதைக் கொடுத்து ரூ.7 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

அதிக விலை (More expensive)

பழைய பொருட்களுக்கு எப்போதாவது மவுசு அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில், பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களுக்கு அண்மைகாலமாகக் மவுசு கூடிக்கொண்டே வருகிறது. ஏனெனில், பழைய ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களைப் பொக்கிஷங்களாகக் கருதும் சிலர், அவற்றுக்கு எந்த விலையும் கொடுக்க முன்வருகிறார்கள். இதனைப் பயன்படுத்திக்கொண்டால், அதிர்ஷ்மும் உங்களுக்கு இருந்தால், வீட்டில் இருந்தபடியே லட்சாதிபதியாக மாறலாம்.

நீங்கள் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளைச் சேகரித்து வைப்பவராக இருந்தால், இந்த அரிய வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ரூ.7 லட்சம் வரை (Up to Rs.7 lakh)

இந்த நோட்டுகளுக்கும் நாணயங்களுக்கும் ஆன்லைனில் நல்ல டிமாண்ட் இருக்கிறது. இந்த பழமைவாய்நத, ஒரு ரூபாய் நோட்டு மட்டும் உங்களிடம் இருந்தால் வீட்டில் இருந்தபடியே ரூ.7 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம்.

நோட்டின் சிறப்பு அம்சம் (Special feature of the note)

இது பழைய ஒரு ரூபாய் நோட்டு. 26 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோட்டுகள் நிறுத்தப்பட்டுவிட்டன. அதன் பின்னர் 2015ஆம் ஆண்டில் இந்த ஒரு ரூபாய் நோட்டை மறுபதிப்பு செய்து வெளியிட்டது இந்திய அரசு.

இந்த ஒரு ரூபாய் நோட்டில் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ஜே.டபிள்யூ கெல்லியின் கையொப்பம் இருக்க வேண்டும்.

இது முதலில் 1935ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டது.

OLXல் விற்கலாம் (Can be sold on OLX)

இதுமட்டுமல்லாமல் மற்ற அரிய வகை ஒரு ரூபாய் நோட்டுகளுக்கும் பணம் கிடைக்கிறது. பழைய நோட்டுகளையும் நாணயங்களையும் விற்பனை செய்ய நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யலாம். நீங்கள் அந்த ஒரு ரூபாய் நோட்டை OLX வெப்சைட்டில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம்.

விற்பது எப்படி? (How to sell?)

  • முதலில் இந்த வெப்சைட்டில் உங்களை ஒரு விற்பனையாளராகப் பதிவுசெய்ய வேண்டும்.

  • உங்களுடைய மொபைல் நம்பர், ஈமெயில் ஐடி போன்றவற்றைப் பதிவிட வேண்டியிருக்கும்.

  • அதன் பின்னர் உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • விருப்பம் உள்ளவர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு இந்த நோட்டுக்கு உரிய விலை கொடுத்து வாங்கிக் கொள்வார்கள்.

  • அதிர்ஷ்டம் இருந்தால் நீங்களும் இதை வைத்து லட்சக்கணக்கில் சமாளிக்கலாம்.

மேலும் படிக்க...

கோமாரி நோய்த் தாக்குதலால் அடுத்தடுத்து 200 மாடுகள் உயிரிழந்த பரிதாபம்!

கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி தட்டுப்பாடு: இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)