எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, SBI RD வட்டி விகிதம் (Interest Rate) 3-5 ஆண்டு காலவரையறைக்கு 5.3 சதவீதமாகும். 5 வருடங்களுக்கும் மேலான SBI RD வட்டி விகிதம் 5.4 சதவீதமாகும்.
SBI RD கால்குலேட்டர்
RD கணக்கு வைத்திருப்பவர் ஒரு மூத்த குடிமகனாக இருந்தால், கூடுதலாக 0.80 சதவீத வட்டி பெறுவார்கள். ஒரு மூத்த குடிமகன் 5 வருட காலத்திற்கு பணத்தை டெபாசிட் (Deposit) செய்தால் SBI RD-யில் 6.2 சதவீத வட்டி வருமானம் கிடைக்கும்.
22%-க்கும் அதிகமான வருவாயை வழங்கும் ஸ்டேட் பாங்கின் அதிரடித் திட்டம்
SBI RD அபராத விதிகள்
மாதாந்திர எஸ்பிஐ ஆர்.டி.யை (SBI RD) செலுத்தாததற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. முதிர்வு காலம் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவான கணக்குகளுக்கு, மாதத்திற்கு ரூ. 100 க்கு ரூ .1.50 என்ற அளவில் வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு மேல் முதிர்வு காலம் உள்ள கணக்குகளுக்கு, மாதத்திற்கு ரூ. 100 க்கு ரூ. 2.00 என்ற அளவில் வசூலிக்கப்படுகிறது. ஒரு முதலீட்டாளர் தொடர்ச்சியாக ஆறு தவணைகளை டெபாசிட் (Deposit) செய்யத் தவறினால், எஸ்பிஐ ஆர்.டி கணக்கு முன்கூட்டியே மூடப்பட்டு, இருப்புத் தொகை (Balance) கணக்கு வைத்திருப்பவருக்கு செலுத்தப்படும்.
SBI RD சேவை கட்டணம்
தொடர்ச்சியாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளை (Installment) செலுத்தவில்லை மற்றும் கணக்கு முறைப்படுத்தப்படவில்லை என்றால் முதிர்வு தேதியில் அல்லது அதற்குப் பிறகு செலுத்தப்பட்ட RD கணக்குகளில் ரூ. 10 சேவை கட்டணம் (Service charge) வசூலிக்கப்படும், என்று sbi.co. வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாதந்தோறும் ரூ.10,000 வேணுமா? SBI வங்கியின் இந்தத் திட்டத்தில் இப்பவே சேர்ந்திருங்க!!
ஒரு முதலீட்டாளர் 60 வயதிற்குட்பட்டவராக இருந்து, SBI RD-யில் பத்து வருடங்களுக்கு ரூ. 1,000 முதலீடு (Invest) செய்தால், முதலீட்டாளருக்கு SBI RD வட்டி விகிதம் 5.4 சதவீதம் கிடைக்கும். SBI RD கால்குலேட்டரைப் பொறுத்தவரை, நீங்கள் எஸ்பிஐ ஆர்.டி வட்டி விகிதத்தில் 5.4 சதவீதத்தில் 120 மாதங்களுக்கு ரூ. 1000 டெபாசிட் செய்தால், உங்கள் எஸ்பிஐ ஆர்.டி முதிர்வு தொகை ரூ. 1,59,155 கிடைக்கும். ஒரு முதலீட்டாளர் 60 வயதிற்குட்பட்டவராக இருந்து, SBI RD-யில் பத்து வருடங்களுக்கு ரூ. 1,000 முதலீடு செய்தால், முதலீட்டாளருக்கு SBI RD வட்டி விகிதம் 5.4 சதவீதம் கிடைக்கும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
4 சதவீத வட்டியில் சிறப்பு பயிர் கடன்- எஸ்பிஐ வழங்குகிறது!
வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கும் வேளாண் தங்கக்கடன்- எஸ்பிஐ வழங்குகிறது!
22%-க்கும் அதிகமான வருவாயை வழங்கும் ஸ்டேட் பாங்கின் அதிரடித் திட்டம்