வேலை இல்லாத இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று இந்த மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து, இளைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் அறிவிப்பு
நீங்கள் வேலையில்லாத இளைஞராக இருந்தால், அரசாங்கத்திடமிருந்து உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு, சத்தீஸ்கர் மாநில அரசு இளைஞர்களுக்கு வேலையில்லா உதவித்தொகையை (unemployment allowance) அறிவித்துள்ளது. மாநிலத்தின் வேலையற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வேலையில்லா உதவித்தொகை வழங்குவதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார்.
பாகேல் ட்வீட்
அடுத்த நிதியாண்டு முதல் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று பாகேல் ட்வீட் செய்துள்ளார். 2018 தேர்தல் பிரச்சாரத்தின் போது வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க இந்த வாக்குறுதியை காங்கிரஸ் அளித்திருந்தது.
அடுத்த நிதியாண்டு முதல்
இந்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேலையில்லா இளைஞர்களுக்கு அடுத்த நிதியாண்டு முதல் வேலையில்லா உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ.2,500
வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, வேலையில்லா உதவித்தொகையாக மாதம் தோறும் ரூ.2500 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கான அளவுகோல்கள், தொகை மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து அரசு ஆலோசித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜஸ்தான் அரசு
அம்மாநில அரசு அதிகாரிகள் தற்போது ராஜஸ்தான் அரசு மாடலில் வேலையின்மை உதவித்தொகையை ஆய்வு செய்து வருகின்றனர். ராஜஸ்தான் அரசு 'முதலமைச்சர் யுவ சம்பல் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு 2019 முதல் வேலையின்மை உதவித்தொகையை வழங்குகிறது
சத்தீஸ்கரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 26.2% கடன் சுமை இருக்கிறது. இதுதவிர, தொழிலாளர்கள் மற்றும் பெண்களுக்கான பல மக்கள் நலத் திட்டங்களையும் முதல்வர் அறிவித்தார். இதனால் நிதிச் சுமை அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழலில் தற்போது அறிவித்துள்ள வேலையின்மை உதவித் தொகை திட்டம் அரசுக்கு கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. கொரோனா பிரச்சினை சமயத்தில் கூட வேலையின்மை உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோ!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!