2021 - 2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்வதற்கு வரும் ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, விரைவில் வருமான வரித் தாக்கல் செய்யும்படி வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது. ஒரு நபரின் வருமானம் எண்றால் என்ன? சம்பளம் என்றால் என்ன? சம்பளமும் வருமானமும் ஒன்றா அல்லது வெவ்வேறா? வருமான வரிச் சட்டம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.
சம்பளம் (Salary)
வருமான வரிச் சட்டப்படி ஒரு ஊழியர் வேலை செய்யும் நிறுவனத்திடம் அவர் வேலைக்காக பெற்றுக்கொள்ளும் பணம்தான் சம்பளம்.
வருமானம் (Income)
வருமான வரிச் சட்டத்தின்படி, வருமானத்திற்கு விரிவான அர்த்தம் உள்ளது. சம்பளத்துக்கு வேலை செய்யும் ஒரு ஊழியருக்கு, அவர் நிறுவனத்திடம் இருந்து பெறும் பணமே வருமானம். ஒரு தொழிலதிபருக்கு அவரது நிகர லாபமே வருமானம். இதுபோக வட்டி, லாப பங்கு, கமிஷன் ஆகியவையும் வருமானமாக கருதப்படும். கட்டிடம், தங்கம் போல சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணமும் வருமானம் தான்.
படி (Allowance)
படி என்பது சம்பளம் போக ஒரு ஊழியர் தனது தேவைகளை சந்தித்துக் கொள்ள அவ்வப்போது வழங்கப்படும் நிலையான தொகைகள் ஆகும். உதாரணமாக, உணவுப் படி, பயணப் படி எனலாம்.
மேலும் படிக்க
வந்த வேகத்திலேயே கரைகிறதா உங்கள் சம்பளம்? 50:30:20 முறையைப் பின்பற்றுங்கள்!
ரிசர்வ் வங்கி ஆளுநரின் சம்பளம் இவ்வளவா? வெளியானது சம்பளப் பட்டியல்!