Blogs

Saturday, 11 September 2021 07:59 AM , by: Elavarse Sivakumar

வாழ்நாள் முழுவதும், உங்கள் குடும்பத்திற்காக ஓடாக உழைக்கும் நீங்கள் ஓய்வு பெறும்போதாவது கையில் கொஞ்சம் பணத்துடன் இருக்க வேண்டும் எனக் கருதுபவரா? நீங்கள். அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குத்தான்.

சாதுர்யமான முதலீடு (Tactical investment)

அந்த வகையில் ஓய்வின்போது கோடீஸ்வரர் ஆக, நீங்கள் தொடர்ந்து புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், கையில் ஒரு கோடி ரூபாயுடன் மாதம் ரூ.27,500 ஓய்வூதியம் பெறலாம்.

நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.74 ஐ மட்டும் சேமித்து அதை NPS முதலீடு செய்தால், ஓய்வு பெறும் போது உங்கள் கையில் ஒரு கோடி ரூபாய் இருக்கும்.

20 வயது முதல் (From the age of 20)

உங்களது 20 வயதில் இருந்தே, உங்கள் ஓய்வூதியத்திற்கான திட்டமிடலைத் தொடங்கலாம். பொதுவாக இந்த வயதில் வேலை செல்லவில்லை என்றாலும், ஒரு நாளைக்கு ரூ .74 சேமிப்பது பெரிய விஷயமல்ல. அதேநேரத்தில் இந்த முதலீட்டு திட்டம் மிகவும் பாதுகாப்பானது

NPS திட்டத்தில் செய்யப்படும் முதலீடு உங்களை ஒரு கோடீஸ்வரராக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

ரூ.1.03 கோடி (Rs 1.03 crore)

உங்களுக்கு 20 வயது என்று வைத்துக்கொள்வோம். NPS இல் நீங்கள் நாள் ஒன்றுக்கு ரூ .74 அதாவது மாதத்திற்கு ரூ.2230 சேமித்து முதலீடு செய்தால், 40 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் ஓய்வு பெறும்போது, ​​நீங்கள் ஒரு கோடீஸ்வரராக இருப்பீர்கள். உங்களுக்கு 9% என்ற விகிதத்தில் வருமானம் கிடைத்தது என்று வைத்துக்கொண்டால், நீங்கள் ஓய்வு பெறும்போது, ​​உங்கள் மொத்த ஓய்வூதிய தொகை ரூ.1.03 கோடியாக இருக்கும். எனவே NPS திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்குங்கள்

முதலீடு விபரம் (Investment details)

வயது                                 - 20 ஆண்டுகள்

மாத முதலீடு                      - ரூ. 2230

முதலீட்டுக் காலம்              - 40 ஆண்டுகள்

மதிப்பிடப்பட்ட வருமானம் - 9%

வருமான விபரம் (Income details)

மொத்த முதலீடு                 - ரூ.10.7 லட்சம்

பெறப்பட்ட மொத்த வட்டி   - ரூ .92.40 லட்சம்

ஓய்வூதிய தொகை              - 1.03 கோடி

இதில், நீங்கள் பணத்தை ஒரே நேரத்தில் திரும்பப் பெற முடியாது, அதில் 60 சதவிகிதத்தை மட்டுமே நீங்கள் எடுக்க முடியும். எஞ்சிய 40 சதவிகிதத்தை நீங்கள் வருடாந்திர முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். அதில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் கிடைக்கும். உங்கள் பணத்தின் 40% வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

ரூ.27,500 ஓய்வூதியம் (Rs.27,500 pension)

உங்களுக்கு 60 வயதாகும்போது, ​​நீங்கள் மொத்தமாக டுரூ.61.86 லட்சத்தைத் திரும்பப் பெற முடியும் மற்றும் அதற்கான வட்டி 8% என்று கணக்கிட்டால், ஒவ்வொரு மாத ஓய்வூதியமும் சுமார் 27500 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்

ஓய்வூதியக் கணக்கு (Pension account)

வருடாந்திர திட்டத்தில் முதலீடு   -   40 சதவீதம்
மதிப்பிடப்பட்ட வட்டி விகிதம்      -     8%
பெற்ற மொத்த தொகை              -  ரூ.61.86 லட்சம்
மாதாந்திர ஓய்வூதியம்                -  ரூ.27,496

இது சந்தையுடன் இணைந்த முதலீட்டுத் திட்டம் என்பதால், கிடைக்கும் வருமானத்தின் அளவில் சிறிது மாறுபடும் வாய்ப்பு உள்ளது. எந்தவொரு முதலீட்டையும், இளம் வயதிலேயே தொடங்குவது நல்ல பலனைத் தரும்.

மேலும் படிக்க...

வருமான வரி தாக்கல் செய்வதில் தொடரும் சிக்கல்: காலக்கெடு நீட்டிப்பு!

ரயில் late ஆயிடுச்சா? உங்களுக்கு இழப்பீடு கிடைக்கும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)