எச்டிஎஃப்சி வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வட்டி உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) சேமிப்புக் கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை திருத்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருப்பதாக எச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, 50 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் தொகை கொண்ட சேமிப்புக் கணக்குகளுக்கு 3% வட்டி வழங்கப்படும். 50 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் தொகை கொண்ட சேமிப்புக் கணக்குகளுக்கு 3.50% வட்டி வழங்கப்படும்.
புதிய வட்டி விகிதம்
-
50 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட் - 3%
-
50 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட டெபாசிட் - 3.50%
இப்புதிய வட்டி விகிதங்கள் உள்நாட்டு சேமிப்புக் கணக்குகள், NRO சேமிப்புக் கணக்குகள், NRE சேமிப்புக் கணக்குகள் ஆகியவற்றுக்கு பொருந்தும். சேமிப்புக் கணக்குகளுக்கு வட்டி விகிதம் தினசரி பேலன்ஸ் தொகை அடிப்படையில் கணக்கிடப்படும். மொத்தமாக காலாண்டு வாரியாக வட்டித் தொகை செலுத்தப்படும். இதுமட்டுமல்லாமல்,ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியையும், எச்டிஎஃப்சி வங்கி உயர்த்தியுள்ளது. இந்த விலைஉயர்வும் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, 7 நாள் முதல் 10 ஆண்டு வரையில் பல்வேறு கால வரம்புகளுக்கான ஃபிக்சட் டெபாசிட்டுக்கு 2.5% முதல் 5.6% வரை வட்டி வழங்குகிறது.
வட்டிக் குறைப்பு
அதேநேரத்தில் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கி 10 லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட் கொண்ட சேமிப்புக் கணக்குகளுக்கு 2.70% வட்டியும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் கொண்ட கணக்குகளுக்கு 2.75% வட்டியும் வழங்குகிறது.
மேலும் படிக்க...
கொளுத்தும் வெயிலில் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாதா?
பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?