Blogs

Sunday, 30 May 2021 07:36 PM , by: R. Balakrishnan

Credit : Bankinfo Security

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு (Lockdown) அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவருக்கும் நிதி நெருக்கடி நிலவுகிறது. ஊரடங்கு பிரச்சினைகளால் வங்கிகளுக்கும் ஏடிஎம்களுக்கும் செல்வதே சிரமமாக இருக்கிறது. இதுபோன்ற சூழலில், வங்கிகளில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அதற்குத் தீர்வு காணும் வகையில் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது கேஷ் வித்டிரா விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது.

புதிய வசதி

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள கிளை தவிர்த்து மற்ற கிளைகளில் பணம் எடுக்கும்போது, இனி ஒரு நாளைக்கு ரூ.25,000 வரையில் பணம் எடுக்கலாம். இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது ட்விட்டர் (Twitter) பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இந்த கொரோனா சமயத்தில் ஆதரவு தரும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

அதேபோல, காசோலை மூலமாகப் பணம் எடுக்கும்போது ஒருநாளில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையில் எடுக்கலாம். இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், 2021 செப்டம்பர் மாதம் வரையில் இந்த விதிமுறைகள் அமலில் இருக்கும் எனவும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இதனால், SBI வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - பிரதமர் அறிவிப்பு

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)