இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐக்கு (SBI) நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். வீட்டுக் கடன்கள் மீதான வட்டியை உயர்த்தவில்லை என எஸ்பிஐ வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
வட்டி விகிதம் உயரவில்லை:
எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வீட்டுக் கடன்களுக்கான (Housing loan) ஒரிஜினல் வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளதாகவும், வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, மார்ச் 31ஆம் தேதி வரை தற்காலிகமாக 6.70% வட்டிக்கு வீட்டுக் கடன்கள் வழங்கப்பட்டதாகவும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பழையபடி ஒரிஜினல் வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. எனவே, ஒரிஜினல் வட்டி உயர்த்தப்படவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.
எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பண்டிகைக்கால சலுகையாக மார்ச் 31ஆம் தேதி வரை வட்டி சலுகை வழங்கப்பட்டது. பின்னர் பழையபடி 6.95% ஒரிஜினல் வட்டி விகிதம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது. மேலும், பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படுவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. அதாவது, வீட்டுக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 0.05% வட்டிச் சலுகை தொடர்ந்து வழங்கப்படும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
SBI-யின் அதிரடி ஆஃபர்! பிரிமியமே இல்லாமல் ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ்!
மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம்: 6 ஆண்டுகளில் 15 இலட்சம் கோடி கடன்!
உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க, பெஸ்ட் முதலீடு எதுன்னு பாருங்க!