நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அம்ரித் கலாஷ் சிறப்பு டெபாசிட் திட்டத்தின் கால அளவை நீட்டித்துள்ளது. சிறு முதலீட்டாளர்களுக்காக இந்த சிறப்பு டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது எஸ்பிஐ வங்கி. அதாவது 2023ம் ஆண்டு பிப்ரவரி 15 முதல் மார்ச் 31ம் தேதி வரையான காலக்கட்டத்தில் முதலீடு செய்யும் வகையில் இந்த டெபாசிட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது ஏப்ரல் 12 முதல் ஜூன் 30ம் தேதி வரை அம்ரித் கலாஷ் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
அம்ரித் கலாஷ் சிறப்பு டெபாசிட்
அம்ரித் கலாஷ் சிறப்பு டெபாசிட் திட்டத்தில் கால அளவு 400 நாட்கள் ஆகும். இந்த சிறப்பு டெபாசிட் திட்டத்துக்கு 7.10 சதவிகிதம் வட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவிகித வட்டி விகிதம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் ஜூன் 30ம் தேதி முதலீடு செய்யலாம் என எஸ்பிஐ வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ அம்ரித் கலாஷ் எஃப்டி திட்டம் 400 நாட்கள் சிறப்பு தவணைக் காலத்துடன் வருகிறது. இதில் பொது மக்களுக்கு 7.10% வட்டி கிடைக்கும் , ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு கூடுதல் வட்டி கிடைக்கும். 2 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்கள், புதிய மற்றும் புதுப்பித்தல் டெபாசிட்கள் மற்றும் டெர்ம் டெபாசிட் மற்றும் சிறப்பு கால வைப்பு உள்ளிட்ட உள்நாட்டு சில்லறை டெபாசிட்கள் மட்டுமே SBI Amrit Kalash FD திட்டத்திற்கு தகுதியான வைப்புகள் ஆகும்.
எஸ்பிஐயின் அம்ரித் கலாஷ் டெபாசிட் திட்டத்தில் முன்கூட்டியே திரும்பப் பெறுதல் மற்றும் டெபாசிட் மீது கடன் பெறுவதற்கான வசதிகளும் உள்ளன. இந்த சிறப்பு டெபாசிட்டுக்கு மாதாந்திர,காலாண்டு, அரையாண்டு இடைவெளியிலும் வட்டி வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க
புதிய இ-பாஸ்புக் திட்டம் அறிமுகம்: PF பயனர்களுக்கு சூப்பர் வசதி!
சொந்தமாக தொழில் தொடங்குவோருக்கு இது முக்கியம்: பிர்லா வழங்கிய அறிவுரை!