Blogs

Wednesday, 20 October 2021 10:09 AM , by: Elavarse Sivakumar

Credit : Dailythanthi

மனநல பிரச்சினையால் அதிகரித்து வரும் தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் ஸ்பெயின் நாட்டில்  புதிய முயற்சியாக அழுவதற்கெனத் தனி அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அழுகை அறை (Crying room)

அழுகை அறைக்கு வரவேற்கிறோம்' என்று வினோதமான வாசகத்துடன் வரவேற்கிறது ஸ்பெயினின் மாட்ரிக் நகரில் அமைந்துள்ள அழுகை அறை.

குறிப்பாக மன நலம் பாதிக்கப்படும் நபர் வாய் விட்டு அழுவதன் மூலம் பாதி குணம் அடையமுடியும். இதன் அடிப்படையிலேயே ஸ்பெயின் நாட்டில் அழுகை அறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்கொலைத் தடுப்பு சேவை (Suicide Prevention Service)

கடந்த வாரத்தில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், மனநல பராமரிப்பு இயக்கத்தை அறிவித்தார். இதற்காக 100 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 24 மணி நேர தற்கொலை தடுப்பு உதவி சேவை, அழுகை அறை  போன்ற சேவைகளும் அடங்கும்.

மனநலப் பிரச்சினையால் நடக்கும் தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் இந்த புதிய அறை உருவாக்கப்பட்டுள்ளது.கவலைகள் தீரும் வகையில் மனம் திறந்து அழுவதற்காக இந்த அழுகை அறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த அறையில் உளவியல் மருத்துவர் உட்பட மனச்சோர்வடையும் போது அழைக்கக்கூடிய நபர்களின் பெயர்களுடன் ஒரு மூலையில் தொலைபேசிகள் உள்ளன, அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியும் ஆறுதல் பெறும் வகையில் இந்த அறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

5.8 % பேர் (5.8%)

புள்ளிவிபரங்களின்படி, 10 இளைஞர்களில் ஒருவர் மனநல பிரச்சினையுடன் இருப்பதாகவும், ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 5.8 சதவீதம் பேர் கவலையால் பாதிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

சமைல் பாத்திரத்தில் கல்யாணம்- அசத்திய மணமக்கள்!

பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)