சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இம்மாதம் முழுவதும் நடைபெறும் இப்பயிற்சியில் புதிதாக தொழில்முனைவோர்க்கு உதவும் வகையில் இலவச மற்றும் கட்டண பயிற்சி வகுப்புகள் நடை பெற உள்ளன. விருப்பமுள்ளவர்கள் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்து அலுவலக பணி நாட்களில் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. பயிற்சி கட்டணத்தில் இணைய விரும்புபவர்கள் ரூ.100 செலுத்தி தங்களுடையை பெயரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
இலவச மற்றும் கட்டண பயிற்சி விவரங்கள்
நாள் |
பயிற்சி விவரம் |
பயிற்சி வகை |
03/03/20 |
சொட்டுநீர்ப் பாசனத்தில் புதிய தொழில்நுட்பங்கள் |
இலவச பயிற்சி |
04/03/20 |
கலப்பு தீவன பயிர் சாகுபடி |
கட்டண பயிற்சி |
06/03/20 |
சிறுதானிய மதிப்புக் கூட்டல் |
இலவச பயிற்சி |
11/03/20 |
அலங்கார மீன் வளர்ப்பு |
கட்டண பயிற்சி |
12/03/20 |
ஆடு வளர்ப்பு |
இலவச பயிற்சி |
16/03/20 |
மீன் வளர்ப்பில் மண் மற்றும் நீர் மேலாண்மை |
இலவச பயிற்சி |
18/03/20 |
இறைச்சி மற்றும் முட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் |
கட்டண பயிற்சி |
மேலும் விவரங்களுக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம் KVK,
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம்,
குன்றக்குடி – 630 206
சிவகங்கை மாவட்டம்
தொலைபேசி : 04577 - 264288
மின்னஞ்சல்:kvkkundrakudi@yahoo.co.in