அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இருந்து முன்கூட்டியே விலகுவதற்கான விதிமுறையை, பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் மாற்றி அமைத்துள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாக அடல் பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை நிர்வகித்து வரும் பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம், இதற்கான வரவேற்பை அதிகரிக்கும் வகையில், உறுப்பினர்கள் முன்கூட்டியே விலகுவதை எளிதாக்கியுள்ளது.
அடல் பென்ஷன்
அடல் பென்ஷன் திட்ட உறுப்பினர்கள், 60 வயதுக்கு முன் வெளியேற விரும்பினால், உடனடி வங்கிக் கணக்கை சரிபார்த்தல் மூலம் இதை நிறைவேற்றலாம் என பென்ஷன் ஆணையம் தெரிவித்துள்ளது. பென்ஷன் திட்ட உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தி வரும் வங்கிக் கணக்கை செயல்பாட்டில் வைத்திருந்தால், அதன் மூலம் அவர்கள் கோரிக்கை உறுதி செய்யப்பட்டு, சேமிப்பு கணக்கிற்கு பணம் மாற்றப்படும்.
சேமிப்பு கணக்கு செயல் இழந்திருந்தால், நிரந்தர கணக்கு எண்ணில் நிலுவை பணம் பராமரிக்கப்படும்.எனினும் உறுப்பினர்கள் இத்திட்டத்தில் இருந்து வெளியேறுவதை விட, தங்கள் பங்களிப்பை தாமதமாக செலுத்தலாம். பங்களிப்பை நிறுத்துவதால் கணக்கு செயல் இழக்கம் செய்யப்படாது. பின், சிறிதளவு அபராதம் செலுத்தி பங்களிப்பை தொடரலாம்.
மேலும் படிக்க
அனைவருக்கும் பென்சன்: சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் சலுகைகள்!