Blogs

Sunday, 10 January 2021 04:59 PM , by: Daisy Rose Mary

Credit: Zee business

FDக்கள் (Fixed Deposit) மீதான வட்டி விகிதங்களில் வங்கிகள் மாற்றம் கொண்டுவந்துள்ளன. இதில், எஸ்.பி.ஐ, எச்.டி.எஃப்.சி போன்ற பெரிய வங்கிகளை விட சிறிய அளவிலான வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை வழங்கியுள்ளது.

எதிர்கால வாழ்விற்கு ''சேமிப்பு அல்லது நிலையான முதலீடு'' இன்றியமையாததாக கருதப்படுகிறது. கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை முதலீடு செய்கையில் வங்கிகள் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு சற்று அதிகமாகவே வட்டி விகிதத்தை வங்கிகள் வழங்கி வருகின்றன. இந்நிலையில் கொரோன கால நெருக்கடியைத்தொடர்ந்து நிலையான வைப்புத்தொகை மீதான வட்டி விகிதங்களில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டி அம்மசம் என்னவெனில் எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி போன்ற பெரிய பெரிய வங்கிகளை விட சிறு -குறு வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான எஃப்டி-க்கள் மீது அதிக வட்டி விகித்ததை வழங்குவது தெரியவந்துள்ளது.

சிறு-குறு நிதி வங்கிகளால் வழங்கப்படும் மூத்த குடிமக்களுக்கான எஃப்.டி விகிதங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜன ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சமீபத்திய எஃப்.டி வட்டி விகிதங்கள் (Jana Small Finance Bank)

ஜன ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி.களுக்கு 3% முதல் 7.75% வரை வட்டி அளிக்கிறது. முதிர்வு காலம் 3 ஆண்டுகள் முதல் 5 வருடங்களுக்கும் குறைவான வைப்புத்தொகைக்கு அதிக வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. இந்த வைப்புத்தொகைக்கு 7.75% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

 

உத்கர்ஷ் சிறு நிதி வங்கி சமீபத்திய எஃப்.டி வட்டி விகிதங்கள் (Utkarsh Small Finance Bank)

உத்கர்ஷ் சிறு நிதி வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்ச்சியடையும் மூத்த குடிமக்கள் மீதான எஃப்.டிகளுக்கு 3.50% முதல் 7.50% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. முதிர்வு காலம் 700 நாட்களுக்குள்ளான வைப்புத்தொகைக்கு அதிக வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.

சூர்யோதயா சிறு நிதி வங்கி சமீபத்திய எஃப்.டி வட்டி விகிதங்கள் (Suryoday Small Finance Bank)

சூர்யோதயா வங்கியின் மூத்த குடிமக்கள் மீதான எஃப்.டிக்களுக்கு 4.5% முதல் 8% வரை வழங்கி வருகிறது. 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்த நிலையான வைப்பு நிதிகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.

நார்த் ஈஸ்ட் சிறு நிதி வங்கி சமீபத்திய எஃப்.டி வட்டி விகிதங்கள் (North East Small Finance Bank)

நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.களில் 3.5% முதல் 8% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. 730 நாட்களுக்கு மேலான மற்றும் 1095 நாட்களுக்குள்ளான முதிர்ச்சியடைந்த வைப்புத்தொகைக்கு 8% வட்டி விகிதத்தைப் பெறுகிறது.

பொதுமுடக்கத்தால் பணப்புழக்கம் சரிந்ததால் வணிக வங்கிகளின் வட்டி விகிதங்கள் வீழ்ச்சியந்தன. வங்கிகளும் தங்கள் நிலையான வைப்புகளின் வட்டி விகிதங்களை குறைத்தன. முன்னதாக இந்த வங்கிகள் பொது வாடிக்கையாளர்களுக்கு 9% வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 9.5% வட்டி விகிதத்தையும் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க..

Paytm இருந்தால் இரண்டே நிமிடத்தில் ரூ.2 லட்சம் வரை கடன் பெறலாம் - விவரம் உள்ளே!!

வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைத்தது, SBI வங்கி!

பிஸினஸ் ஐடியா 2021 : அமுல் உடன் தொழில் தொடங்கலாம் வாங்க! குறைவான முதலீட்டில் நிறைவான வருமானம்!!

விவசாயிகளுக்கு ரூ.5000 வரை ஓய்வூதியம் கிடைக்க வழிசெய்யும் அரசு திட்டங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)