துருக்கியை சேர்ந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். வழக்கம்போல் சாப்பாடு சாப்பிட வந்த அவருக்கு இப்படியொரு அதிர்ச்சி காத்திருக்கும் என்பது யாரும் எதிர்பார்க்கவில்லை. விமான ஊழியர்கள் மட்டுமல்லாமல், பயணிகள் வரை அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர்.
பொதுவாக உணவு சமைக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதுடன், சமையல் செய்யும்போது கவனத்துடன் இருக்க வேண்டியது மிக மிக அவசியம். ஆனால் கவனம் சிதறும்போது, சிக்கல்களும் நம்மைத் தேடி வந்துவிடுகிறது. அப்படியொரு சம்பவம்தான் இது.
பாம்பின் தலை
துருக்கியின் அங்காரா,விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் இறந்த பாம்பின் தலை இருந்ததாக விமான ஊழியர் புகார் அளித்தார். இதை அடுத்து விமான நிறுவனம் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பதறிய ஊழியர்
துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து ஜெர்மனிக்கு கடந்த ஜூலை புறப்பட்ட விமானத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அப்போது அந்த விமான ஊழியர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுடன் சேர்ந்து பாம்பின் தலை உணவில் கலந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
டுவிட்டர் பதிவு
இதை வீடியோவாக எடுத்து அவர் டுவிட்டரில் பதிவிட்டார். சன் எக்ஸ்பிரஸ் என்ற விமான நிறுவனம் இந்த தகவலை அறிந்ததும் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டு உள்ளது.
ஒப்பந்தம் நிறுத்திவைப்பு
இத்தகைய செயல்பாடுகளை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த விமான நிறுவனத்துக்கு உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைத்துள்ளது.
மேலும் படிக்க...