திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான கோ சாலையில் வளர்க்கப்படும் பசுக்களின் பாலில் இருந்து, சோப்பு, ஷாம்பூ, ஊதுபத்தி உள்ளிட்டவை விரைவில் தயாரிக்கப்பட உள்ளன.
பசுக்கள் வளர்ப்பு (Raising cows)
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான கோ சாலையில் ஏராளமான பசுக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
காப்புரிமை (Patent)
இந்தப் பசுக்களிடம் இருந்து பெறப்படும் சாணம், பால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தேவஸ்தானம் பல்வேறு பொருட்களை தயாரிக்க ஆயூஷ் துறையிடமிருந்து காப்புரிமை பெற்றுள்ளது.
சோப்பு, அகர்பத்திகள், தூய்மை செய்யும் பொருட்கள், விபூதி, சாம்பிராணி, கப் சாம்பிராணி, பற்பசை, ஷாம்பூ உள்ளிட்ட பொருட்களுடன் சாணத்திலிருந்து தயாரிக்கப்பட உள்ளன.
விரைவில் இந்த பொருட்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டுவர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இயற்கை பொருட்களுக்கு மவுசு (Mausu for natural products)
ரசாயனக் கலப்பு இல்லாமல், இயற்கையாகத் தயாரிக்கப்படும் பொருட்கள் உடலுக்கு எந்த வகையிலும் கேடு விளைவிக்காது என்ற விழிப்புணர்வு மக்களிடையே வேறூன்றத் தொடங்கிவிட்டது. எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள ஆயுஷ் அமைச்சகம் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
பெயிண்ட் (Paint)
பசுஞ்சாணத்தில் இருந்து பெயிண்ட் தயாரிக்கும் பணிகளை மத்திய ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதன் அடுத்தகட்டமாக, பசும்பாலில் இருந்து பலவகைப் பொருட்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
பசு மாட்டிற்கு வளைகாப்பு- புதுக்கோட்டையில் புதுமை!
உலகிலேயே குள்ளமான பசு- வெறும் 51 சென்டிமீட்டர்தான் அதன் உயரம்!