பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 1 December, 2023 5:03 PM IST
Somani Seedz

Millionaire Farmer of India Awards 2023, sponsored by Mahindra Tractors-நிகழ்வின் மற்றொரு இணை ஸ்பான்சராக Somani Seedz இணைந்துள்ளது. இதற்கு முன்னதாக Coromandel International Limited நிறுவனமும் MFOI நிகழ்வின் இணை ஸ்பான்சராக இணைந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வருகிற டிச.6 ஆம் தேதி டெல்லியில் உள்ள பூசா மைதானத்தில் MFOI sponsored by Mahindra Tractors நிகழ்வை தொடங்கி வைக்க உள்ளார். அன்றைய தினமே இந்தியா முழுவதும் பயணம் செய்து விவசாயிகளின் புகழை பரப்ப காத்திருக்கும் MFOI kisan bharat yatra-வையும் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். மில்லினியர் விவசாயிகளின் செயல்பாடுகளையும், அவர்கள் கடைப்பிடிக்கும் வேளாண் தொழில் நுட்ப முறைகளையும் அனைத்து விவசாயிகளும் அறிந்திடுவதே நோக்கமாக கொண்டுள்ளது, MFOI kisan bharat yatra.

MFOI நிகழ்வின் முதன்மை ஸ்பான்சர்:

க்ரிஷி ஜாக்ரான் மற்றும் Agriculture world இணைந்து மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா (MFOI) விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவின் நம்பர் 1 டிராக்டர் நிறுவனமான ”மஹிந்திரா டிராக்டர்ஸ்” MFOI 2023 நிகழ்வுக்கான முதன்மை மற்றும் டைட்டில் ஸ்பான்ஸராக இணைந்தது குறித்து ஏற்கெனவே தகவல் வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம். Somani Seedz, Coromandel International Limited நிறுவனமும் இணை ஸ்பான்சராக தற்போது இணைந்துள்ளது.

Somani Seedz:

2013 இல் நிறுவப்பட்ட சோமானி சீட்ஸ் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் காய்கறி விதை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் முக்கியமாக உயர்தர கலப்பின காய்கறி விதைகளை சிறந்த மகசூல், நோய் எதிர்ப்பு மற்றும் பல்வேறு விவசாய-காலநிலை நிலைமைகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை மாதம் டெல்லியிலுள்ள சாணக்யபுரியில் உள்ள தி அசோக் ஹோட்டலில் MFOI விருது வழங்கும் நிகழ்விற்கான கோப்பை மற்றும் இலட்சினை வெளியிடும் நிகழ்வு ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து 16 பிரிவுகளில் விவசாயிகள்/மீனவர்கள்/ கால்நடை பராமரிப்பாளர்கள் என பலரும் இந்தியா முழுவதுமிருந்து விருதுக்கு விண்ணப்பித்து உள்ளனர். வருகிற டிசம்பர் மாதம் 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் டெல்லியில் உள்ள பூசா மைதானத்தில் MFOI விருது வழங்கும் விழாவுடன், வேளாண் கண்காட்சியும் நடைப்பெற உள்ளது.

வேளாண் தொழில் சார்ந்த நிறுவனங்களின் ஸ்டால்கள், வேளாண் அறிஞர்களின் தலைமையில் கருத்தரங்குகள், சாதனை விவசாயிகளுடனான கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்வுகள் நடைப்பெற உள்ள நிலையில் பார்வையாளர்களாக பங்கேற்க விரும்புபவர்கள் இணையம் மூலமாக முன்பதிவு செய்யலாம். அதற்கான லிங்க் பின்வருமாறு-

visitor pass 

இதையும் காண்க:

பூந்தோட்ட மின் இணைப்புக்கு இலவச மின்சாரம்- விவசாயிகள் கோரிக்கை

என்னது தரைக்காற்றே 70 கி.மீ வேகமா? ரெட் அலர்ட் கொடுத்த IMD

English Summary: Somani Seedz joined as co-sponsor of the MFOI Sponsored by Mahindra Tractors
Published on: 01 December 2023, 05:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now