தமிழகத்தைச் சேர்ந்த பிஜேபி நிர்வாகி முருகன் மத்திய இணை அமைச்சராகப் பதவி வகித்துவரும் நிலையில், எதையும் பற்றி கவலைப்படாமல் அவரது தந்தை லோகநாதன் தற்போதும் சைக்கிளில் மண்வெட்டியுடன் விவசாய வேலையில் ஈடுபடுவது மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தந்தையின் உன்னதம் (The nobility of the Father)
அரசாங்க வேலை கிடைத்தாலே அதை ஊரெல்லாம் உரக்கச் சொல்லிப் பெருமைப்படுபவர்களுக்கு மத்தியில், தமது மகன் மத்திய அமைச்சரானபோதிலும், தந்தை தனது விவசாயப் பணிகளைத் தொடரும் ஸ்வாரஸ்யம் தமிழகத்தில் நடக்கிறது.
அமைச்சர் பதவி (Ministerial post)
அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழக பிஜேபி மாநில தலைவராக இருந்து வந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவருக்கு மீன்வளம், கால்நடை, பால் பண்ணை மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை ஒதுக்கப்பட்டது.
கவனிக்கத்தக்கது (Notable)
இந்தியாவில் எத்தனையோ பெரு நகரங்கள் உள்ளபோதும், தமிழகத்தின் கடைகோடி கிராமத்தில் பிறந்த எல்.முருகனுக்கு கிடைத்த இந்த பதவி அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது.
2 மகன்கள் (2 sons)
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள கோனூர் இவரது சொந்த கிராமம் ஆகும். இவரது தந்தை லோகநாதன் (வயது 65), வரதம்மாள் (60). இவர்களுக்கு முருகன், ராமசாமி என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் விவசாய வேலை செய்து தனது மகன்களைப் படிக்க வைத்தனர். இவர்களின் 2-வது மகன் ராமசாமி கடந்த 2016-ம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
மிகப்பெரிய கவுரவம் (The greatest honor)
சிறுவயது முதலே படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்ட எல்.முருகன் சட்டப்படிப்பில் எம்.எல். மற்றும் பி.எச்டி. வரை முடித்து பிஜேபியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரது அயராத உழைப்பைக் கண்டு மத்திய அரசு அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவியை வழங்கி கவுரவித்துள்ளது.
முருகன் கடந்த 7-ந் தேதி மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். தற்போது தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சராகப் பதவியேற்றிருப்பவர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர் (Parents)
மகன் மத்திய அமைச்சர் என்றபோதிலும், முருகனின் பெற்றோர், எவ்வித ஆடம்பரமும் இன்றி, தாங்கள் மேற்கொண்டு வரும் விவசாயப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
ஈடு இணையற்ற பெற்றோர் (Compensating unparalleled parents)
அரசாங்க பதவி கிடைத்தாலே பதவி சுகத்தை அனுபவிக்கத் துடிக்கும் பெற்றோருக்கு மத்தியில், மகன் அமைச்சரானபோதிலும், பந்தாவிற்கும், பகட்டும் இடம்கொடுக்காத இந்த பெற்றோர், ஈடு இணையற்ற பெற்றோர் என்றே சொல்லலாம்.
படிப்படியான வளர்ச்சி (Gradual growth)
சட்டப் படிப்பை முடித்த எல்.முருகன் பிஜேபியில் இணைந்து எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில துணைத்தலைவர், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தேசிய துணைத்தலைவர், மாநிலத் தலைவர் என படிப்படியாக உயர்ந்து தற்போது, மத்திய இணை அமைச்சர் என்ற உச்சத்தை எட்டி உள்ளார்.
எல்.முருகனுக்கு, கலையரசி என்ற மனைவி உள்ளார். அவர் சென்னையில் குழந்தைகள் நல மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு தர்னீஷ், இந்திரஜித் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
மேலும் படிக்க...
சான்று பெறாத கலப்பட விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை! வேளாண் அதிகாரி எச்சரிக்கை!
இளமையில் டீ விற்ற ரயில்வே வாட்நகர் இரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி