Blogs

Sunday, 27 December 2020 03:56 PM , by: Daisy Rose Mary

ஆர்பிஐ வங்கியின் (RBI) 9வது தொடர் தங்க பத்திரம் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கான சிறந்த தேர்வாக இந்த தங்க பத்திர திட்ட முதலீடு விளங்குகிறது.

தங்கம்! வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்ட இந்த தங்கத்தை விரும்பாத மக்களே இல்லை எனலாம். தங்கம் அந்தஸ்தின் அடையாள சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும் இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் மீதுள்ள அபார நம்பிக்கையால், மக்கள் தங்களது முதலீடுகளையும் தங்கத்தில் செய்து வருகின்றனர். அது வெறுமனே தங்க நகைகளாக அல்லாமல், தங்க பத்திரங்களாக வாங்கி வைக்கின்றனர்.

தங்க பத்திர திட்டம்

மத்திய அரசின் திட்டமான தங்கப் பத்திர திட்டத்தின் கீழ், தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம் செய்யப்படவுள்ளது. தங்க வைப்பு (தங்க டெபாசிட்), தங்க பத்திரம், தங்க நாணயம் ஆகிய மூன்று திட்டங்களை பிரதமர் மோடி கடந்த 2015 ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார்.

நாளை முதல் தங்க பத்திரம் விற்பனை

நடப்பு நிதியாண்டின் (2020-2021) ஒன்பதாவது தவணையாக தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம் செய்யப்படவுள்ளது. இந்த தங்க சேமிப்பு பத்திர விநியோகம் வருகிற ஜனவர் 1-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் முதலீடுக்கு தள்ளுபடி

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ .5000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 1 கிராம், 5 கிராம், 10 கிராம், 50 கிராம், 100 கிராம் ஆகிய மதிப்புகளில் தங்கப் பத்திரங்கள் வெளியிடப்படவுள்ளன. ஒருவர், அதிகபட்சமாக, 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். மேலும் முதலீட்டுத் தொகைக்கு 2.50 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும்.
இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடியும் பெற்றுக் கொள்ள முடியும்.

தங்க பத்திரம் - கிராம் ரூ.5000/-

இந்த தங்க பத்திர விற்பனையில் கிராமுக்கு 5,000 ரூபாயாக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இதே ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும் பெற்று 4,950 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

2020 ஆம் ஆண்டில் பண மழை பொழிந்த சிறப்பானத் திட்டங்கள்!

எங்கு விண்ணப்பிப்பது?

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு, பான் கார்டு கட்டாயம் தேவை, அதனுடன், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் ஆகியவற்றை கொண்டு, தங்க பத்திரத்தை அனைத்து அஞ்சலகங்களிலும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

தங்க நகைகளாக வாங்கி, அதற்கு செய்கூலி, சேதாரம் என அதிக பணம் செலவழிப்பதை விட, இது போன்று தங்க பத்திரங்கள் வாங்கி வைப்பது அதிக லாபத்தினையும் கொடுக்கும். வேண்டிய நேரத்தில் விற்றுக்கொள்ளும் வசதியும் உண்டு, எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கு வட்டியும் அளிக்கப்படுவது குறிப்பிடதக்கது. 

வங்கி மேலாளராக விருப்பமா? வாய்ப்பு அளிக்கிறது SBI வங்கி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)