போதைப் பொருள் இருக்கும் இடத்தை கண்டறிய, தேசிய அளவில் அமைக்கப்படும் நாய்கள் பிரிவில், முதற்கட்டமாக, 70 நாய்களுக்கு பயிற்சி (Training for Dogs) அளிக்கப்பட உள்ளது. நம் நாட்டில் போதைப் பொருட்களை ஒழிக்க, மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடங்களை கண்டறிய, என்.டி.டி., எனப்படும் சிறப்பு நாய்கள் பிரிவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாய்களுக்கு பயிற்சி (Training for Dogs)
மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: போதைப் பொருட்கள் இருக்கும் இடத்தை கண்டறிய, சிறப்பு நாய்கள் பிரிவை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் முதற்கட்டமாக, 70 நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்த திட்டம் வகுக்கப்பட்டது. போதைப் பொருட்களை கண்டறிய தேசிய அளவில் அமைக்கப்படும் முதல் நாய்கள் பிரிவு இதுவாகும் என்று அவர் கூறினார்.
நாய்களுக்கு பயிற்சி முடிந்தவுடன், போதைப்பொருள் கடத்துகின்ற கும்பல் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க முயற்சிகள் எடுக்கப்படும். நாய்களுக்கு அதீத மோப்ப சக்தி உள்ளதால், நிச்சயம் இத்திட்டம் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
கேன் குடிநீரின் தரம் எப்படி இருக்க வேண்டும்: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
விரைவான முதுமையைத் தடுக்க இப்போதே வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள்!