மத்திய அரசில் காலியாக உள்ள 3600 பணியிடங்கள், விரைவில் புதிய ஆட்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன. எனவேத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் தற்போது 3600 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பன்முக உதவியாளர் (Multi Tasking (Non-Technical) Staff)
ஹவால்தார் (Havaldar in CBIC and CBN)
காலியிடங்களின் விவரம்
பன்முக உதவியாளர் (Multi Tasking (Non-Technical) Staff) – தேர்வாணையத்தால் பின்னர் அறிவிக்கப்படும்.
ஹவால்தார் (Havaldar in CBIC and CBN) – 3603
கல்வித் தகுதி (Educational Qualification)
10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு (Age Limit)
-
01.01.2022 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
-
இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination), எழுத்து தேர்வு (Descriptive Paper) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி வழி தேர்வு 100 மதிப்பெண்களுக்கு 1 மணி 30 நிமிடங்கள் கால அளவில் நடைபெறும்.
-
இந்த தேர்வில் ஆங்கிலம் (General English), பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning), கணிதம் (Numerical Aptitude) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.
-
ஒவ்வொரு கேள்விக்கும் தலா 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
-
எழுத்துத்தேர்வானது, 50 மதிப்பெண்களுக்கு 45 நிமிட கால அளவில் நடைபெறும்.
-
இந்த தேர்வு கட்டுரை எழுதுதல் (Essay), கடிதம் எழுதுதல், விரிவான விடையளித்தல் போன்ற வகைகளில் அமையும்.
-
இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம்.
-
ஹவால்தார் பணியிடங்களுக்கு கூடுதலாக உடற்தகுதி தேர்வு நடக்கும்.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் (Fees)
ரூ. 100,
இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
கடைசி தேதி (Lastdate)
30.04.22
மேலும் படிக்க...
இதைக் குடித்தால், வெயிலுக்கும் Goodbye- அதிக Weightக்கும் Goodbye!