Blogs

Tuesday, 18 February 2020 10:18 AM , by: Anitha Jegadeesan

பெரம்பலூரில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

பெரம்பலூர்- செங்குணம் பிரிவு சாலை எதிரே அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில், வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு  பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. சிறப்பம்சமாக நாட்டுக்கோழி இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, வளர்க்கும் முறைகள், தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, கோழிக்குஞ்சுகள் பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி முகாமில் விவசாயிகள், கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள், சுயதொழில் செய்ய விரும்புவோர் என அனைவரும் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் காலை 10 மணிக்கு மேல் 5 மணிக்குள் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு தங்களின் வரவை பதிவு செய்ய வேண்டும். தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் 93853 07022 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கால்நடை மருத்துவப்பல்கலைக் கழகம்  தெரிவித்துள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)